முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடையை குறைத்தால் ரூ.6 கோடி பரிசு

சனிக்கிழமை, 9 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

துபாய்,நவ.10 _ உடல் எடையை குறைப்பவர்களுக்கு ரூ.6 கோடி மதிப்புள்ள பரிசாக வழங்கப்படும் என துபாய் நிரவாகம் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள துபாய் நகராட்சி நிர்வாகம் வித்தியாசமான போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. அதில் அதிக எடை உள்ளவர்கள்  தங்கள் எடையை குறைத்தால் அவர்களுக்கு  தங்கம் பரிசாக அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. ஜூலை 19 ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16 ம்தேதி வரை இந்த போட்டி நடந்தது.இதனை யடுத்து இந்த போட்டியில் 2648 பேர்  கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சுமார் ரூ.6 கோடி  மதிப்பில் 16.82 கிலோ தங்கம் பரிசாக வழங்கப்பட்டது. இதில் முதல் பரிசாக  சிரியா நாட்டைச் சேர்ந்த கட்டிட கலைஞர் அகமது இப்ராகிம் அல்ஷேக் என்ற 27 வயது வாலிபர் தட்டிச்சென்றார். மொத்தமாக 26 கிலை எடையை குறைத்த அவருக்கு ரூ.1.70 லட்சம் மதிப்புள்ள தங்கம் பரிசாக வழங்கப்பட்டது.போட்டியில் கலந்து கொண்டவர்கள் குறைந்தபட்சம் 2 கிலோ எடையை குறைக்க வேண்டும். 1 கிலோ எடையை குறைத்தால் ஒரு கிராம் வீதம் தங்கம் வழங்கபடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.ஐந்து கிலோவும் அதற்கு அதிகமாகவும் எடையை குறைப்பவர்களுக்கு ஒவ்வொரு கிலோவுக்கும் 2 கிராம் தங்கம் வழங்கப்பட்டது. இதில் 575 பேர் 2 கிலோவுக்கு அதிகமாகவும்,1795 பேர் 5 கிலோவுக்கு அதிகமாகவும் ,5 பேர் 20 கிலோவுக்கு அதிகமாகவும் குறைத்து அதற்கேற்ப தங்கம் பரிசு வென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்