முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வம்சாவளி டாக்டருக்கு அமெரிக்காவின் கவுரவ விருது

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், நவ.11 - அமெரிக்க சுகாதராத் துறையில் சிறந்த பங்களிப்பாற்றியதற்காக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டரான ராகுல் ஜிண்டாலுக்கு அமெரிக்காவின் கவுரவ விருது வழங்கப்படுகிறது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான ராகுல் ஜிண்டாலுக்கு அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பின் சார்பில் மிகச் சிறந்த அமெரிக்கர் என்ற விருது இம்மாதம் 13_ம் தேதி வழங்கப்படுகிறது. தங்களது சமூகத்திற்கும், இடம் பெயர்ந்து வந்த நாட்டுக்கும் குறிப்பிடத் தக்க வகையில் சேவையாற்றியதற்காக அவருக்கு இந்த கவுரவ விருது வழங்கப்படுகிறது. ஆமதாபாத் பி.ஜே. மருத்துவக் கல்லூரியில் எம்.டி. படித்த ஜிண்டால் தற்போது அமெரிக்காவில் வால்ட்டர் ரீட் தேசிய  ராணுவ மருத்துவ மையத்தில்  அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வருகிறார்.

          

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்