முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கயானா டெஸ்ட் - மே.இ.தீவுகள் பாகிஸ்தான் அணியை வென்றது

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

கயானா, மே. 17 - பாகிஸ்தான் அணிக்கு எதிராக கயானாவில் நடைபெற்ற முதல் கிரிக் கெட் டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 40 ரன் வித் தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரில் 1 - 0 என்ற முன்னிலையை பெற்று உள்ளது. 

கேப்டன் மிஸ்பா உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணி மே. இ. தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் சம்மி தலைமையி லான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

மேற்கு இந்தியத் தீவுகள் அணி மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டது. இதன் முதல் போட்டி கயானா தீவில் உள்ள பிராவிடெ ன்ஸ் அரங்கத்தில் கடந்த 12 -ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிவடைந் தது. 

இந்தப் போட்டியில் முதலில் இன்னிங்சைத் துவக்கிய மே.இ.தீவுகள் அணி முதல்  இன்னிங்சில் 98 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 226 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில், ஒரு வீரர் கூட அரை சதத்தை தாண்டவில்லை. ஆனால் 3 வீரர்கள் கால் சதம் அடித்தனர். 

துவக்க வீரர் சிம்மன்ஸ் அதிகபட்சமாக, 130 பந்தில் 49 ரன்னை எடுத் தார். சந்தர்பால் 83 பந்தில் 27 ரன்னையும், எம். பிராவோ 85 பந்தில் 25 ரன்னையும், ரோச் 80 பந்தில் 24 ரன்னையும், சர்வான் 79 பந்தில் 23 ரன் னையும், எடுத்தனர். சயீத் அஜ்மல் 5 விக்கெட்டையும், மொகமது ஹபீஸ் மற்றும் அப்துர் ரெஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி மே.இ.தீவு பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 64.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையு ம் இழந்து 160 ரன்னில் சுருண்டது. 3 வீரர்கள் கால் சதம் அடித்தனர். 

பின்வரிசை வீரரான அப்துர் ரெஹ்மான் அதிகபட்சமாக, 104 பந்தில் 40 ரன்னை எடுத்தார். அசார் அலி 73 பந்தில் 34 ரன்னையும், உமர் அக் மல் 75 பந்தில் 33 ரன்னையும், டெளபீக் உமர் 19 ரன்னையும் எடுத்தனர். பிஷூ 4 விக்கெட்டையும், ராம்பால் 3 விக்கெட்டையும், சம்மி 2 விக் கெட்டையும் எடுத்தனர். 

அடுத்து 2 -வது இன்னிங்சை ஆடிய மே.இ.தீவு கள் அணி 61.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 152 ரன்னை எடுத்தது. சந்தர்பால் 127 பந்தில் 36 ரன்னையும், பிஷூ 67 பந்தில் 24 ரன்னையும், சிம்மன்ஸ் 29 பந்தில் 21 ரன்னையும், எடுத்தனர். சயீத் அஜ்மல் 6 விக்கெட் எடுத் தார். 

பாகிஸ்தான் அணி 2 -வது இன்னிங்சில் 219 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை மே.இ.தீவுகள் அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 73 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 178 ரன்னை எடுத்தது. 

இதனால் மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்த முதல் டெஸ்டில் 40 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. 

பாகிஸ்தான் அணி தரப்பில், கேப்டன் மிஸ்பா உல் ஹக் 162 பந்தில் 52 ரன்னை எடுத்தார். தவிர, உமர் அக்மல் 102 பந்தில் 47 ரன்னையும், அசாத் சபீக் 110 பந்தில் 42 ரன்னையும், எடுத்தனர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர் . 

மே.இ.தீவு அணி சார்பில், சம்மி அபாரமாக பந்து வீசி 29 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். ராம்பால் 29 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். தவிர ரோச் 1 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக சம்மி தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்