முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாக்கி அணியின் பயிற்சியாளராக பாஸ்கரன் நியமனம்

வியாழக்கிழமை, 21 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, நவ. 22  - இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக வி பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை ஹாக்கி இந்திய அமைப்பு புதன் கிழமை வெளியிட்டது. 

முன்னாள் ஹாக்கி வீரரான பாஸ்கரன் 1980 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெ?ன்ற இந்திய அணிக்கு கேப்டனாக பதவி வகித்தவர். 

ஹாக்கி அணிக்கு சமீபத்தில் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட டேரி வால்ஷூடன் இணைந்து பாஸ்கரன் பணியாற்ற உள்ளார். 

பாஸ்கரனின் அனுபவம் இந்திய அணிக்கு கைகொடுக்கும் என்று ஹாக்கி இந்திய அமைப்பின் பொதுச் செயலாளர் நரீந்தர் பத்ரா தெரிவித்துள்ளார். 

ஆடவர் ஹாக்கி அணிக்கு பயிற்சியாள ராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப் பதாக பாஸ்கரன் தெரிவித்துள்ளார். 

இதற்கு முன்னர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக பல முறை பாஸ்கரன் இருந்துள்ளது நினைவு கூறத்தக்கது. 

ஹாக்கி விளையாட்டின் மூலம் நாட்டுக்கு பெருமை சேர்த்த பாஸ்கரன் அர்ஜுனா விருதையும்(1980), பத்மஸ்ரீ விருதையும் (1981) பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்