சீனாவில் பெட்ரோல் குழாய் வெடித்து 35 பேர் சாவு

Image Unavailable

 

பீஜிங், நவ.24  -  சீனாவில் பெட்ரோல் குழாய் வெடித்து 35 பேர் உயிரிழந்தனர். இதில் 166 பேர் காயமடைந்தனர். சீனாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஷான்டான் மாகாணத்தில் கிங்தாவ் என்ற துறைமுக நகரம் உள்ளது. இங்குள்ள குவாங்தாவ் மாவட்டத்தில்  உள்ள கிங்தாவ் பகுதியில்  ஹைகி என்ற இடத்திலிருந்து சைதாங்தாவ் என்ற இடம் வரை சாலையின் ஓரத்தில் பதிக்கப்பட்டிருந்த பெட்ரோல் குழாய்களில் திடீரென தீப்பிடித்தது. அதிகாலை 3 மணி அளவில் பெட்ரோல் குழாய்களில் கசிவு ஏற்பட்டு பெட்ரோல் பரவி வெடித்து சிதறியது. இதில் கார்கள், சாலை யோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள், தூக்கி வீசப்பட்டன. இதில் சம்பவ இடத்திலேயே 35 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.166 பேர் காயமடைந்தனர்.  

கடற்கரையோர சாலையில் குழாய்கள் அமைந்திருப்பதால் சுமார் 1000 சதுர மீட்டர்  வரை தரையிலும், சுமார் 300 சதுர மீட்டர் வரை கடலிலும் பெட்ரோல் பரவி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் தீ யணைப்புப் படையினரும், மீட்புப் படையினரும்  உஷார் படுத்தப்பட்டனர். 

                  

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ