முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் ஊழலை தனியாக விசாரிக்க சாமி கோரிக்கை

புதன்கிழமை, 18 மே 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி,மே.19 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம். அதனால் அதுகுறித்து எனது புகாரை தனியாக விசாரிக்க வேண்டும் என்று டெல்லி தனிக்கோர்ட்டை ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலால் ரூ. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் எடுத்த கம்பெனிகளில் சில பாகிஸ்தான் மற்றும் சீனாவில் உள்ளன. இந்த இரு நாடுகளும் இந்தியாவின் மாபெரும் எதிரிகள். அதனால் அந்த கம்பெனிகளால் நாட்டின் பாதுகாப்புக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய விசாரிக்கக்கோரி டெல்லி கோர்ட்டில் அகில இந்திய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக நேற்று கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. அப்போது சுப்பிரமணியசாமி ஆஜராகி வாதாடுகையில் கூறியதாவது:-

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. இரண்டு குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் என் கூறிய புகார் குறித்தோ அல்லது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து எதுவும் இருக்கிறதா என்பது குறித்து எதுவும் இடம் பெறவில்லை. அதனால் நான் கொடுத்துள்ள புகாரை தனியாக விசாரிக்க வேண்டும். 2 ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பாக ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நான் விரிவான முறையில் கூறியுள்ளேன். ஆனால் அது குறித்து சி.பி.ஐ. விசாரிக்கவில்லை. அதனால் நான் தனியாக கொடுத்துள்ள புகார் குறித்து தனியாகவே விசாரிக்க வேண்டும். இந்த வழக்கு சார்பாக ஆஜராக அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். மேலும் நானும் வழக்கறிஞராக ஆஜராக எனக்கு முழு உரிமை என்றும் சுப்பிரமணியசாமி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்