முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கான் பொருளாதாரம் முன்னேறும்: ஹமீது கர்சாய்

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

புனே, டிச.17 - இந்தியாவின் நிதி உதவியால் ஆப்கானிஸ்தான் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும்  என்று அந்த நாட்டு பிரதமர்  ஹமீது கர்சாய் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கர்சாய், புனேயில் நடைபெற்ற சர்வதேச உறவுகள் குறித்த மாநாட்டில் உரையாற் றி னார். அப்போது அவர் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானுக்கு போதுமான அளவு இந்தியா நிதி உதவி அளித்துள்ளது. அது பயங்கரவாதத்திலிருந்து மீண்டு நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும்பொருளாதார முன்னேற்றத்துக்கு ஏதுவாக இருக்கும். பயங்கரவாதத்துக்கு எதிராக மக்களை காக்கும் பொறுப்பு நமக்கு உண்டு. ஜனநாயகத்தின் மீதான எதிர்மறை எண்ண ங்கள் தவறு என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. கல்வித் துறையில் ஆப்கன் மேம்பாடு அடைய இந்தியா அளித்து வரும் உதவிகள் பாராட்டுக்கு யது. ஆப்கானைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயின்று வருகின்றனர் என்றார் கர்சாய். 

 

   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்