முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக் அயுக்தா ஒராண்டுக்குள் அமைக்க வேண்டும்

புதன்கிழமை, 18 டிசம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்ல, டிச.19 - லோக்பால் மசோதவுக்கு மாநிலங்களவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் ஒரு ஆண்டுக்குள் லோக் அயுக்தா அமைக்கப்பட வேண்டும் என மத்திய சட்ட  அமைச்சர் கபில் சிபல் வலியுறுத்தி உள்ளார். ஊழல் குற்றசாட்டுக்கு ஆளாகும் பிரதமர் மற்றும்  மாநில முதல்வர்களையும் விசாரிக்கும் அதிகாரம் கொண்ட லோக்பால் மசோதாவுக்கு மாநிலங்களவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இந்த மசோதாவுக்கு ஏற்கனவே மக்களவை ஒப்புதல் அளித்திருந்தாலும், தற்போது இந்த மசோதாவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பதால் மீண்டும் மக்களவையில்  நிறைவேற்றப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. இதன் காரணமாக, நேற்று மக்களவையில் லோக்பால் மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது.  இதற்கிடையில் மாநிலங்களவையில் லோக்பால் மசோதா நிறைவேற ஒத்துழைப்பு அளித்த அனைத்து எம்.பி.க்களுக்கும் மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் கபில் சிபல் கூறியாதவது:- லோக்பால் மசோதா விவகாரத்தில் அரசியல் செய்யாமல் அனைத்து எம்.பிக்களும் ஒத்துழைப்பு அளித்தனர். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு வருடத்துக்குள் மாநிலங்களில் லோக் அயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என லோக்பால் மசோதா கூறுகிறது. இந்த கால கட்டத்துக்குள் சட்டமன்றங்களில் லோக் அயுக்தா சட்டம் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன். இவ்வாறு கபில் சிபல் கூறினார். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கமல்நாத் கூறுகையில், இந்திய அரசியல் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வரும் இந்த காலகட்டத்தில் லோக்பால் மசோதா மிகவும் அவசியமானதாகும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!