முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ அதிகாரியை கொடுமைப் படுத்தியவர்கள் மீது வழக்கு

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

அஜ்மீர்,டிச.31 - ராணுவத்தில் நடக்கும் ஊழல்களையும் முறைகேடுகளையும் சுட்டுக்காட்டிய ஜூனியர் ராணுவ அதிகாரியை கொடுமைப்படுத்தியதோடு அவரை மனநோயாளியாக்க முயன்ற ராணுவ உயர் அதிகாரிகள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் பகுதியில் நசீர்பாத் கண்டோன்மெண்டில் ராணுவ பிரிகேடு உள்ளது. இந்த பிரிகேட்டில் ஜூனியர் அதிகாரியாக அருண் குமார் இருக்கிறார். அவர் பீரங்கிப்ப்டை பிரிவில் லெப்டினெட் கர்னல் அந்தஸ்த்தில் பணிபுரிகிறார். அவர் பணிபுரியும் பிரிகேட்டில் முறைகேடுகளும் ஊழல்களும் நடப்பதாக அருண்குமார் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் அங்கு பணிபுரியும் உயர் ராணுவ அதிகாரிகள் ஆத்திரமைடந்து,அருண் குமாரை கொடுமைப்படுத்தியுள்ளனர். அதோடுமட்டுமல்லாமல் கடந்த மே மாதம் 17_ம் தேதி அருண்குமாருக்கு நோட்டீசு கொடுத்து அதில் அருண்குமார் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவரை  ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளோம் என்று கூறியுள்ளனர். அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து மனரீதியாக பாதிக்கப்பட்டவர் என்று சான்றிதழ் பெற முயற்சி செய்துள்ளனர். இதற்கு அந்த ராணுவ மருத்துவமனையில் உள்ள கமாண்டர் உதவியுடன் இந்த சதி வேலையில் பிரிகேடியர் முயன்றதாக அருண்குமார் குற்றஞ்சாட்டி உள்ளார். ராணுவ உயரதிகாரிகள் தொடர்ந்து சித்ரவதை செய்யவே பொறுமை இழந்த அருண்குமார், கடந்த மே மாதம் 21_ம் தேதி ஜோத்பூர் காவல் நிலையத்திற்கு கடிதம் மூலம் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் தாம் பணிபுரியும் பிரிகேட்டில் நடக்கும் நிதி முறைகேடு மற்றும் ஊழல்கள் குறித்து விரிவாக எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இந்த முறைகேடுகளை தடுக்க போலீசார் தலையிட வேண்டும் என்று இதுகுறித்து ராணுவ தலைமை தளபதிக்கு தெரிவிக்குமாறும் அருண்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். அருண்குமார் புகார் கொடுத்திருப்பதை அரிந்த பிரிகேடியர் ஒருவர் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இனிமேல் நீ ராணுவத்தில் பணிபுரிய முடியாது.வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும் என்று மிரட்டியுள்ளார். அஜ்மீர் கோர்ட்டிலும் அருண்குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட கோர்ட்டு சம்பந்தப்பட்ட ராணுவ உயரதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்பேரில் ஜோத்பூர் காவல் நிலைய போலீசார், 6 பிரிகேட்டில் உள்ள 6 ராணுவ உயரதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் கோர்ட்டு உத்தரவுப்படி பிரிகேடி கமாண்டர் ஏ.கே.கங்குலி, துணை கர்னல் லலித் அக்னிஹோத்ரி, கர்னல் ரோஹித் ஷா, மருத்துவமனை கமாண்டர் சர்சிவ வாஸ்பியன்,மருத்துவமனை அதிகாரி மேஜர் எஸ்.வி.ரேஹா,மேஜர் சுரேந்தர் சிங் ஆகியோர் மீது கோர்ட்டு உத்தரவுப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் இந்த புகார் குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக ராணுவ செய்தி தொடர்பாளர் கோஸ்வாமி தெரிவித்துள்ளார். ராணுவ தலைமை தளபதிக்கும் இந்த விஷயம் தெரியும். இந்த விஷயம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் விசாரணை அதிகாரி அசோக் மீனா தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago