பழனியில் சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா

சனிக்கிழமை, 21 மே 2011      ஆன்மிகம்
Milk

 

பழனி, மே.21 - பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருஞான சம்பந்தருக்கு பார்வதி தேவியார் ஞானப்பால் ஊட்டும் விழா நடைபெற்றது.பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் சித்தனாதன் சன்ஸ் சார்பில் திருஞான சம்பந்தருக்கு பார்வதி தேவியார் ஞானப்பால் ஊட்டும் விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக திருஞான சம்பந்தர் உற்சவர் சிலைக்கு பால், பன்னீர், தயிர், நெய், இளநீர், பஞ்சாமிர்தம், சர்க்கரை உட்பட 16 வகையான பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தீபாரதனைக்கு பின்பு சித்தனாதன் எஸ்.ஜி. தனசேகருக்கு கோவில் சார்பில் பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. இதன் பிறகு காளை வாகனத்தில் சிவபெருமானும் பார்வதியும் கோவிலின் உட்பிரகாரத்தில் உலா வந்தனர். பின்னர் திருஞான சம்பந்தருக்கு பார்வதி பொற்கிண்ணத்தில் ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக ஞானப்பால் வழங்கப்பட்டது.

விழாவில் பழனி கோவில் நிர்வாக அதிகாரி ராஜமாணிக்கம், சித்தனாதன் சன்ஸ் தனசேகர், சிவநேசன், பழனிவேலு, செந்தில் குமார், வழக்கறிஞர் ராகவன், விஜயகுமார், நாகராஜன், டாக்டர். ஜெகதீஸ்வரன், தருண், கொங்கு வேளாளர் சங்கம் ஆலோசகர் மாரிமுத்து, விஜய் காட்டன் மில்ஸ் பாஸ்கரன், சரவணன், வள்ளுவர் தியேட்டர் செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமானோரும் பக்தர்களும் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: