முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஷஸ் தொடர் கடைசி டெஸ்ட் இன்று துவக்கம்

வியாழக்கிழமை, 2 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

சிட்னி, ஜன. 3 - ஆஷஸ் தொடர் கடைசி டெஸ்டிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து அணியை ஒயிட் வாஷ் ஆக்க ஆஸ்திரேலிய அணி வியூகம் அமைத்து வருகிறது. 

கேப்டன் அலிஸ்டார் கூக் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸி. அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. 

இதுவரை இரு அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் முடிவடைந்து விட்டன. இதில் அனைத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 4_ 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 5 _வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் இன்று துவங்க இருக்கிறது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றன. 

முதல் 4 டெஸ்டிலும் வெற்றி பெற்றதால் இந்த டெஸ்டிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து அணியை ஒயிட் வாஷ் ஆக்க ஆஸ்திரேலியா திட்டம் தீட்டி வருகிறது. 

அதே நேரம் இங்கிலாந்து அணி முதல் 4 டெஸ்டிலும் தோற்றதால் இதில் ஆறுதல் வெற்றி பெற முழு முயற்சிகளையும் மேற் கொண்டு வருகிறது. வெற்றி பெற முடியாவிட்டாலும் ஆட்டத்தை டிரா செய்யும் நோக்கத்தில் உள்ளது. 

முன்னதாக பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸி. அணி 381 ரன் வித்தியாசத்திலும், அடிலெய்டில் நடந்த டெஸ்டில் 218 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. 

இதனைத் தொடர்ந்து பெர்த்தில் நடந்த 3_வது டெஸ்டில் 150 ரன் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த 4_வது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மைக்கேல் கிளார்க், டேவிட் வார்னர். ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். 

பௌலிங்கைப் பொறுத்தவரை முன்னணி வேகப் பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சன் மற்றும் சுழற் பந்து வீச்சாளர் நாதன் லியான் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். 

இந்தப் போட்டி தற்போது ஆஸி. மண்ணில் நடைபெறுவது ஆஸ்திரேலியாவுக்கு பலமாகும். எனவே இங்கிலாந்து அணி தோல்வியைத் தவிர்க்க கடுமையாக போராட வேண்டிய நிலையில் உள்ளது. 

கேப்டன் கூக் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒரு நாள் போட்டியில் வலுவாக உள்ளது. ஆனால் டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை பலவீனமாகவே உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்