முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் அணி இன்று நியூசிலாந்து பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஜன. 12 - இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி தலைமையில் நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்ய விமானம் மூலம் இன்று கிளம்புகிறது. 

தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. 

நியூசிலாந்து மற்றும் இந்தியஅணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ஆகியவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி நேப்பியரில் வருகிற 19_ம் தேதி நடக்கிறது. 31 _ம் தேதியுடன் ஒரு நாள் தொடர் முடிகிறது. 

இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 6_ம் தேதி ஆக்லாந்தில் தொடங்குகிறது. பிப்ரவரி 18_ம்  தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிகிறது. 

இந்திய அணி கடைசியாக 2009_ம் ஆண்டு நியூசிலாந்து சென்றது. அப்போது 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 3_1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதே போல டெஸ்ட் தொடரை 1_ 0 என்ற கணக்கில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றி சாதனை புரிந்தது. 

இந்திய அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணத்தில் ஒரு நாள் தொடரை 0_ 2 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை 0 _ 1 என்ற கணக்கிலும் இழந்தது. இதனால் தற்போதைய நியூசிலாந்து பயணம் சவாலாக இருக்கும். 

நியூசிலாந்து அணி சமீபத்தில் மே.ற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 2_ 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒரு நாள் தொடர் சமநிலையில் முடிந்தது. 

நியூசிலாந்து பயணத்தில் விளையாடும் இந்திய ஒரு நாள் போட்டி அணி வீரர்கள் வருமாறு _ 

தோனி (கேப்டன்), ஷிகார் தவான், ரோகித் சர்மா, விராட் கோக்லி, சுரேஷ் ரெய்னா, ரகானே, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஷ்வர் குமார், மொகமது சமி, அம்பதி ராயுடு, இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, ஈஷ்வர் பாண்டே, ஸ்டூவர்ட் பின்னி மற்றும் வருண் ஆரோன் ஆகியோர். 

இதில் ரெய்னா, அமித் மிஸ்ரா, வருண் ஆரோன், ஸ்டூவர்ட் பின்னி ஆகிய வீரர்கள் டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை. 

அவர்களுக்குப் பதிலாக தமிழக வீரர் முரளிவிஜய், புஜாரா, ஜாஹிர்கான், உமேஷ் யாதவ், விருத்திமான் சகா ஆகியோர் டெஸ்ட் அணியில் உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்