தூதர்கள் வீட்டு பணியாட்கள் விபர பதிவு கட்டாயம்

Image Unavailable

 

வாஷிங்டன், ஜன, 16 - வெளிநாட்டுத் தூதர்கள் வீட்டு பணியாட்கள் விபரங்களை பதிவதை கட்டாயமாக்கும் திட்ட அறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

பணிப் பெண்ணுக்கு விசா பெற்றதில் போலி ஆவணங்களை கொடுத்து மோசடியில் ஈடுபட்டதாக இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இருப்பினும், அமெரிக்காவின் இந்த திடீர் நடவடிக்கைக்கு தேவயானி வழக்கு காரணமாக குறிப்பிடப்படவில்லை.

திட்ட அறிக்கை விபரம்: அமெரிக்காவில் பணியில் இருக்கும் வெளிநாட்டுத் தூதர்கள் வீட்டில் பணியாற்ற வருபவர்கள் அமெரிக்கா வந்திறங்கியவுடன் நேரில் சென்று குடியேற்று மையத்தில் தங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என அந்த திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

80 பக்கங்கள் கொண்ட இந்த திட்ட அறிக்கையில், ஏ-3, ஜி-5 (A-3 , G-5) விசா பெற்று பணிக்கு வரும் பணியாட்கள் உரிமைகளை பாதுகாக்க உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. சபை அதிகாரிகள், அலுவலர்கள், உலக வங்கி அதிகாரிகள், சர்வதேச நிதிய அதிகாரிகள் மற்றும் பல வெளிநாட்டு தூதரக அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்ற வருபவர்களுக்கு ஏ-3, ஜி-5 (A-3 , G-5) வகை விசா வழங்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ