முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் மீண்டும் தாக்குதல் - தீவிரவாதிகள் திட்டம்

சனிக்கிழமை, 21 மே 2011      உலகம்
Image Unavailable

சிகாகோ,மே.22 - மும்பை தாக்குதல் போன்று இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க தூதர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பதவி விலக இருக்கும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி ஜெ ரோமர்  சிகாகோ சென்றுள்ளார். அங்கு நடந்த வெளியுறவு அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 

தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. அதே வேளையில் ஒரு சிறிய வன்முறை சம்பவங்கள் நடந்தால்கூட இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி விடும். ஏனெனில் மும்பையில் நடந்த தாக்குதல் போன்று இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அது போன்று நடந்தால் இரு நாடுகளுக்கு இடையே பதட்டம் ஏற்படும். எனவே இது போன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க இந்தியாவுக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட டேவிட் ஹெட்லிக்கை அமெரிக்கா கைது செய்து சிறையில் அடைத்தது. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நல்லுறவு 21 ம் நூற்றாண்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தெற்காசியாவில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என அமெரிக்காவும், இந்தியாவும் விரும்புகின்றன. மேலும் ஆப்கானிஸ்தானத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தியாக இந்தியா விளங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்