ஆஸ்தி., ஓபன்: லியாண்டர்- ஸ்டீபானெக் ஜோடி முன்னேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

மெல்போர்ன், ஜன. 20 - ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்  போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவின் 3_வது சுற்றில் லியாண்டர் _ ஸ்டீபானெக் ஜோடி வெற்றி பெற்று 4_வது சுற்றுக்கு முன்னேறியது. 

ஆனால் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான செரீனா வில்லி

யம்ஸ் 4_வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி 

அடைந்தார். 

இந்த வருடத்தின் முதலாவது கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் மெல்போர்ன் நகரில் கடந்த சில நாட்களாக வெகு விமர்சையாக நடந்து வருகிறது. 

7 _ம் நாளான நேற்று நடந்த மகளிர் ஒற்+

றயர் பிரிவு 4_வது சுற்று ஆட்டம் ஒன்றில்

முதல் நிலை வீராங்கனையான செரீனா 

வில்லியம்ஸ் செர்பிய வீராங்கனை மோதினர். 

இதில் செர்பியாவைச் சேர்ந்த இவானோவிக் அபாரமாக ஆடி 4_6 6_3, 6_3 என்ற செட் கணக்கில் செரீனாவை வீழ்த்தினார். 

அமெரிக்க வீராங்கனையான செரீனா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவானோவிக் முதல் முறையாக கால் இறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறார். 

சீன வீராங்கனையான லீ நா மற்றொரு ஆட்டத்தில் ரஷ்ய வீராங்கனை மகரோவாவுடன் மோதினார். இதில் லீ 6_2, 6_0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். 

ஜெர்மனி வீராங்கனையான ஹெர்பர் 4_வது சுற்று ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி 

அடைந்தார். 9_ ம் நிலை வீராங்கனையான அவரை இத்தாலி வீராங்கனை பென்னாட் 1_6, 6_4, 5_7 என்ற செட் கணக்கில் வென்

றார். 

ஆடவருக்கான இரட்டையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டத்தில் லியாண்டர் மற்றும் ஸ்டீபானெக் ஜோடியும் நியூசிலாந்து மற்றும் இந்திய இணையும் மோதின. 

இதில் இந்திய மற்றும் செக் . குடியரசு ஜோடி அபாரமாக ஆடி 6_3, 6_2 என்ற செட் கணக்கில் யூகி பாம்ப்ரி மற்றும் வீனஸ் இணையை வென்று 4_வது சுற்றுக்குள் நுழைந்தது. 

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: