முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3வது ஒரு நாள்: இந்தியா - நியூசிலாந்து ஆக்லாந்தில் மோதல்

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

ஆக்லாந்து, ஜன. 25 - இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3_வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்து நகரில் இன்று நடக்க இருக்கிறது. 

இந்திய அணிக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. 

கேப்டன் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் மெக்குல்லம் தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 5  போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. 

முன்னதாக முடிந்த முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. 

இதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. இறுதியில் டக்வொர்த் லிவிஸ் முறைப்படி நியூசி. அணி வெற்றி பெற்றது. 

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் நியூசிலாந்து அணி 2_0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்ததால் தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிலையில் உள்ளது. 

தொடர் துவங்குவதற்கு முன்பாக இந்திய அணி ஒரு நாள் போட்டிக்கான தரவரி சையில் முதலிடத்தில் இருந்தது. 

தொடர்ந்து 2 ஆட்டத்தில் தோற்றதால் நம்பர் _ 1 இடத்தை இழந்தது. அடுத்த 3 போட்டியிலும் வெற்றி பெற்றால் மீண்டும் நம்பர் _ 1 இடத்தை அடைய முடியும். 

இந்திய அணியில் ஷிகார் தவான், ரோகித் சர்மா, விராட் கோக்லி, சுரெஷ் ரெய்னா, கேப்டன் தோனி , ரவீந்திர ஜடேஜா ஆகிய சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். 

பௌலிங்கைப் பொறுத்தவரை மொகமது சமி நன்றாக பந்து வீசி வருகிறார். அவருக்குப் பக்கபலமாக புவனேஷ்வர் குமார் மற்றும் ஜாஹிகான் ஆகியோர் உள்ளனர். 

சுழற் பந்து வீச்சிற்கு அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் உள்ளனர். ஆனால் சுழற் பந்து வீச்சு எடுபடவில்லை. 

முதல் இரண்டு போட்டியில் தோல்வி அடைந்ததால் இந்திய அணி புதிய வியூகத்துடன் களம் இறங்குகிறது. இதில் வெற்றி பெற அணி கவனம் செலத்தி வருகிறது. 

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான இந்த 3_வது போட்டி ஆக்லாந்து நகரில் காலை 6.30 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி சோனி மேக்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago