முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து முஷாரஃபுக்கு விலக்கு

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜன.29 - பாகிஸ்தான் நீதிபதிகளை சிறைப்பிடித்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு விலக்கு அளித்த இஸ்லாமாபாத்  தீவிரவாதத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 2007-ம் ஆண்டு அப்போதைய அதிபர் பர்வேஸ் முஷாரஃப்  உத்தரவின் பேரில் நீதிபதிகள் 60 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு இஸ்லாமாபாத் தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் 2009-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உடல்நிலை சரியில்லாமல் முஷாரஃப் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது ஆஜரான முஷாரஃபின் வழக்குரைஞர் , அவரது உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதனை பரிசீலனை செய்த நீதிபதி ரஹ்மான் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளித்த உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 10-ம் தேதி வரை ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்