முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐநா கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்: அமெரிக்கா

புதன்கிழமை, 29 ஜனவரி 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஜன, 30 - ஐநா மனித உரிமை கவுன்சிலில் வரும் மார்ச் மாதத்தில் இலங்கை சம்பந்தமாக மறுபடியும் தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

பல்வேறு பிரச்சினைகள், தீர்வு காணப்படாமல் எந்தவித முன்னேற்றமும் இன்றி இருப்பதற்கு இலங்கையை பொறுப்பேற்க வைப்பதிலும் தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் அக்கறை இருப்பதால்தான் மீண்டும் ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வர உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலங்கள் பறிக்கப்படுவது, மத உள்நோக்கத்துடன் நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள், பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் விஷயத்தில் அமெரிக்காவுக்கு வேதனைதான் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 2009ல் நடந்த போரின்போது நடந்த குண்டுவீச்சில் இறந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் புதைக்கப்பட்ட இடம் என தெரி வித்து அமெரிக்க பிரதிநிதி பார்வையிடும் படம் ஒன்றை அண்மையில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டது கொழும்பின் ஆத்திரத்தை உசுப்பி விட்டது.

இந்நிலையில், போரின்போது நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் தகவலை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்று இலங்கை அதிபரின் செயலர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை என்ற அச்சுறுத்தல் வாள் போல் இலங்கையின் மீது தொங்கிக்கொண்டே இருக்கி றது. நல்லிணக்க குழுவின் பரிந்துரை களை அமல்படுத்த இலங்கைக்கு இன்னும் 18 மாதங்களே இருக் கிறது. இந்த நடவடிக்கையில் குளறுபடி ஏற்பட்டால் மீண்டும் மோதல் மூளக்கூடிய அச்சுறுத்தல் இருக்கிறது.

பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமெரிக்காவின் நடைமுறைகளை நாங்கள் பயன்படுத்த மாட்டோம். நாங்களே சொந்தமாக அதற்கு வழி வைத்திருக்கிறோம். போர்க்குற்றம், மனித உரிமை மீறல் புகார் விவகாரங்களில் முன்னேற்றம் காணாமல் இலங்கை நிதானமாக செயல்படுவதால் சர்வதேச சமுதாயம் பொறுமை இழந்து விட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை கூறுவது நியாய மாகாது. புகார் விஷயத்தில் நட வடிக்கை எடுப்பதில் முடிந்த வகையில் அக்கறை காட்டுகிறோம்.

போருக்கு பிறகு இலங்கை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வடக்கு மாகாணத் தில் தேர்தல் நடத்தப்பட்டு தமிழர் கட்சி தலைமையிலான ஆட்சி நடக்கிறது. அரசியல் அதிகார பகிர்வு நடவடிக்கையின் ஆரம்பம் இது என்றார் வீரதுங்க.ஆனால், பெரும்பான்மை சிங்களர்கள் தங்களிடம் பாகுபாடு காட்டுவதாக தமிழர்கள் புகார் கூறுகின்றனர். இலங்கை ராணு வத்தின் அத்துமீறல் புகார்கள் பற்றி விசாரிக்க அரசு தீவிரம் காட்டுவதில்லை என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். போரின்போது மருத்துவமனைகள் தாக்கப்பட்டதாகவும், மருந்து, உணவுப்பொருள்கள் கொண்டு செல்வது தடுக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், குற்றங்களுக்கு பொறுப்பு ஏற்காமல் தட்டிக் கழிக்கிறது இலங்கை என்றும். இதை இலங்கை சரி செய்யா விட்டால் சர்வதேச நாடுகள் செய்ய வேண்டிவரும் என்றும் வாஷிங்ட னில் உள்ள மனித உரிமைகள் அமைப்பின் ஆசிய பிராந்திய இயக்குநர் ஜான் சிப்டன் எச்சரித்தார்.

உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்றாகவேண்டும் என்பதற்காக இனப்படுகொலையை மத்திய அரசு நிகழ்த்தியதை நிரூபிப்போம் என்று வடக்கு மாகாண அரசு தெரிவித்துள்ளது.

போரின்போது இறந்தவர்கள், காணாமல் போனவர்கள் பற்றி சர்வதேச சமுதாயத்தின் மேற்பார் வையில் கணக்கெடுப்பு நடத்துவது என வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றையும் வடக்கு மாகாண அரசு நிறைவேற்றியுள்ளது.

மத்திய அரசும் போரில் உயிரிழந்தோர், காணாமல் போனவர் கள்பற்றி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. போரின் போது இலங்கை ராணுவம் நடத்தியதாக்குதலில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப் பட்டதாக ஐநாவின் முந்தைய அறிக்கை தெரிவித்தது. ஆனால் இத்தகைய புகார்களை இலங்கை மறுத்து வருகிறது.

போர்க்குற்றம் தொடர்பாக மார்ச்சுக்குள் நடவடிக்கை எடுத்து முன்னேற்றம் கண்டு, தமிழர்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுத்த தவறினால் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக ஐநா ஆதரவிலான விசாரணைக்கு பிரிட்டன் வலியுறுத்தும் என்று அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த நவம்பர் மாதம் எச்சரித்தார்.

போரின்போது இலங்கை ராணுவம், புலிகள் தரப்பில் இழைக்கப் பட்ட போர்க்குற்றங்கள் பற்றி இலங்கையே விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கடந்த 2 ஆண்டுகளில் 2 தீர்மானங்களை ஐநா கவுன்சில் நிறைவேற்றியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago