முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உரங்களை உரிய காலத்தில் வழங்க முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

புதன்கிழமை, 25 மே 2011      இந்தியா
Image Unavailable

சென்னை, மே.- 25 - தமிழக்துக்கு ஒதுக்கவேண்டிய  டி.ஏ.பி. உரங்களை  உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்று
முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு  கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் எனது தலைமையில் புதிய ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு, வேளாண் துறைக்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இந்த வானிலை இலாகாவினர் கணித்துள்ளபடி தென்மேற்கு பருவ மழை, குறிப்பிட்ட காலத்தில் பெய்ய தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய அணைக்கட்டுக்களில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்புள்ளது. இத்தகைய சாதகமான சூழ்நிலைகள் நிலவுவதால் முன்பட்டப்பயிரிடுதலை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
2011-ம் ஆண்டு முன்பட்ட பயிர் பருவகாலத்துக்கு மத்திய அரசு 2 லட்சம் டன்கள் டன் அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி) உரத்தை ஒதுக்கீடு செய்து இருப்பதை உங்களது மேலான கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். இதில் 2011 மே மாதம் வரை 47 ஆயிரம் டன்கள் டிஏபி உரம் தரப்பட வேண்டும். ஆனால் 20 ஆயிரம் டன்கள் உரமே தமிழகம் பெற்றுள்ளது.
ஏற்கனவே 27 ஆயிரம் டன்கள் டிஏபி உரம் பற்றாக்குறை நிலவுகிறது. 2011 ஜூன் மாத குறுவை சாகுபடிக்கு மேலும் கூடுதலாக 30 ஆயிரம் டன் டிஏபி உரம் எங்கலுக்கு தேவைப்படுகிறது.
எனவே தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள டிஏபி மற்றும் மற்ற உரங்களின் அளவை, உரிய காலத்தில் வழங்க, உறுதி செய்யும்படி உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்