முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 1/2 ஆண்டில் வெளிநாட்டில் இந்தியாவுக்கு 10-வது தோல்வி

திங்கட்கிழமை, 10 பெப்ரவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, பிப்.11 - வெளிநாட்டு மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி தொடர்கிறது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம்செய்து விளையாடிவரும் டோனி தலைமையிலான இந்திய அணி 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்தது. 2 டெஸ்ட் போட்டித் தொடரில் ஆக்லாந்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 40 ரன் வித்தியாசத்தில் தோற்றது. கடந்த 2 1\2 ஆண்டுகளில் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் டெஸ்டில் சந்திக்கும் 10-வது தோல்வியாகும்.

இந்திய அணி கடைசியாக 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிங்ஸ்டன் டெஸ்டில் 63 ரன்னில் வெற்றி பெற்றது. அதன் பிறகு இந்திய அணிவெளிநாட்டு மைதானத்தில் இதுவரை வெற்றி பெறவில்லை. 10 டெஸ்டில் தோற்றது. 3 டெஸ்டில் வெஸ்த் இண்டிஸ் 2, தென் ஆப்பிரிக்கா 1 டிரா செய்தது. இங்கிலாந்துக்கு எதிராக 4 டெஸ்டிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்டிலும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு டெஸ்டிலும், தற்போது நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டிலும்தோற்றது. டோனியின் மோசமான நிலை இந்த 10 தோல்விகளும் டோனி தலைமையில்தான் கிடைத்தது. அதற்கு முன்பு அவரது தலைமையிலான அணி 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான செஞ்சூரியன் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்னில் தோற்றது. டோனி கேப்டனில் இந்திய அணி வெளிநாட்டில் 11 டெஸ்டில் தோற்றுள்ளது. இது மோசமான நிகழ்வாகும். இதற்கு முன்பு கங்குலி, பட்டோடி, அசாருதிதீன் ஆகியோர் தலைமையில் வெளிநாட்டு மைதானத்தில் இந்திய அணி தலா 10 டெஸ்டில் தோற்று இருந்தது. அதற்கு அடுத்தபடியாக பிஷன்சிங்பெடி 8 டெஸ்டிலும்,கவாஸ்கர், தெண்டுல்கர் தலா 6 டெஸ்டிலும் வெளிநாட்டில் தோற்று இருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்