ஐ.நா.வில் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க முடிவு

UN-logo 0

 

புதுடெல்லி, பிப்,.16  - ஐ.நா.வில்  அமெரிக்கா கொண்டு வரும்  தீர்மான த்தின் மீது இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க உள்ளது.இலங்கையில் விசுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரில்  60 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதை யடுத்து போர்க்குற்றம் புரிந்ததாக ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக 2 தடவை கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் ஜெனிவாவில் ஐ.நா.சபையின் மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. அதில் இலங்கை மீது அமெரிக்கா 3-வது தடவையாக கண்டனத் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து இங்கிலாந்து இந்தத்  தீர்மானத்தை கொண்டு வருகிறது. 

இதை தோற்கடிக்கும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டு வருகிறது. இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ் சீனா உள்ளிட்ட நாடுகளில் ஆதரவு திரட்டி வருகிறார். கடந்த 2 முறையும் இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. தற்போது்ம ஆதரித்து வாக்களி்க்க உள்ளது. இதை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவி்த்தார். அரசியல் சீரமைப்புக்காக தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாண கவுன்சில் தேர்தலை நடத்தியது. ஆனால்  அதிகாரம் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது.

                

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ