1984 கலவரம்: சோனியா மீதான வழக்கை ரத்து செய்ய எதிர்ப்பு

Image Unavailable

 

நியூயார்க், பிப். 20 - சீக்கியர்கள் மீதான கலவரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா உள்ளிட்டோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரும் காங்கிரசுக்கு சீக்கிய அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் 1984 ம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். 

இந்த கலவரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கும் தொடர்பு இருப்பதாக சீக்கியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

இந்த கலவரத்தில் தொடர்புடைய காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு அக்கட்சியின் தலைவர் சோனியா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தார். 

எனவே இதனை கண்டித்து அமெரிக்காவில் உள்ள சீக்கியர்களுக்கான சமூக நீதி என்ற அமைப்பு நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக சோனியாவுக்கு சம்மன் அனுப்ப இரண்டு முறை நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. 

இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யகாங்கிரஸ் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு சீக்கியர்களுக்கான சமூக நீதி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. 

இதுகுறித்து அந்த அமைப்பின் சார்பில் வழக்கு தொடுத்த அமெரிக்க வக்கீல் குர்பத்வாத் பன்னம் கூறியதாவது _ 

சீக்கியர்களுக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்த வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. 

இந்த  வழக்கை ரத்து செய்ய காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது. இதில் காங்கிரஸ் தலைவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்பதை அதன் துணை தலைவர் ராகுல் காந்தியே தனது பேட்டியின் போதுதெரிவித்து உள்ளார். 

எனவே அவரது பேட்டியையும் இந்த வழக்கில் ஆதாரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளோம் என்றார் அவர். 

மேலும் இந்த வழக்கை ரத்து செய்ய கோரும் காங்கிரஸ் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூயார்க் நீதிமன்றத்தில் மனுதாக்கல் ஒன்றையும் சீக்கிய அமைப்பு செய்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ