முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூர்யா தலைமையில் தமிழ் ஹீரோக்கள் அணி

வெள்ளிக்கிழமை, 27 மே 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, மே.27 -  தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட நடிகர்கள் மோதும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் ஜூன் 4-ம் தேதி தொடங்குகிறது. நடிகர் சூர்யா தலைமையில் தமிழ் நடிகர்கள் அணி இதில் பங்கேற்கிறது. செலப்ரிட்டி கிரிக்கெட் லீக் (சிசிஎல்) என இந்த போட்டிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜூன் 4-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை போட்டிகள் நடக்கிறது. இதற்காக அந்தந்த மொழியை சேர்ந்த பிரபல நடிகர்கள் தலைமையில் கிரிக்கெட் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 

தமிழில் சூர்யா தலைமையிலான அணியில் சரத்குமார், விஷால், ஆர்யா, பரத், ஜெயம் ரவி, அப்பாஸ், மாதவன், ஷாம், ஜித்தன் ரமேஷ், விக்ராந்த், சாந்தனு, ரமணா, விஷ்ணு, கார்த்திக்குமார், சிவா இடம்பெற்றுள்ளனர். இதற்கான அறிமுக விழா சென்னையில் நடந்தது. போட்டியில் பங்கேற்கும் நடிகர்கள் மேடையில் தோன்றினார்கள். பாலிவுட் அணி சல்மான் கான் தலைமையிலும் மற்ற மொழி அணியினர் அங்குள்ள பிரபல நடிகர்கள் தலைமையிலும் போட்டியில் பங்கேற்கும்.

முதல் போட்டி ஜூன் 4-ம் தேதி கன்னடம் இந்தி, தமிழ் தெலுங்கு அணிகள் மோதுகின்றன.

இப்போட்டி பெங்களூரில் நடக்கிறது. 5-ம் தேதி சென்னையில் தமிழ் கன்னடம், தெலுங்கு இந்தி அணியும், 11-ம் தேதி ஐதராபாத்தில் தமிழ் இந்தி மற்றும் கன்னடம் தெலுங்கு அணியும் மோதுகின்றன. இறுதி போட்டி 12-ம் தேதி ஐதராபாத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் மலையாள திரையுலகம் பங்கேற்கவில்லை. சிசிஎல் இயக்குனர்களாக ராதிகா சரத்குமார், ஸ்ரீனிவாசலு மூர்த்தி, திருமால் ரெட்டி, விஷ்ணு இந்தூரி நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony