முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோனி தலைமையுடன் ஒப்பிட வேண்டாம்: விராட் கோக்லி

செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

டாக்கா, பிப். 26 - நான் தற்காலிக கேப்டன் தான் என்றும், தோனி தலைமையுடன் ஒப்பிட வேண் டாம் என்று விராட் கோக்லி வேண்டு கோள் விடுத்து இருக்கிறார். 

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டனாக முன்னணி வீரர்களில் ஒருவரான விராட் கோக்லி செயல்படுகிறார். 

வழக்கமான கேப்டன் தோனி காயத்தால் விலகியதால் அவர் கேப்டன் பொறுப்பை இந்தப் போட்டிக்கு ஏற்றுள்ளார். 

இது குறித்து விராட் கோக்லி டாக்காவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது _ 

தோனியின் தலைமையுடன் என்னை ஒப்பிட வேண்டாம். அவர் பல ஆண்டுகளாக கேப்டனாக பணி புரிந்தவர். 

நான் இந்த ஒரே ஒரு போட்டித் தொடரு க்கு மட்டும் தான் கேப்டன். வழக்கமான கேப்டனுக்கும், தற்காலிக கேப்டனுக்கும் முற்றிலும் வேறுபாடு இருக்கும். 

வெற்றி பெற்றால் பாராட்டுகிறார்கள். தோல்வி அடைந்தால் விமர்சனம் செய்கிறார்கள். இது எல்லாம் விளையாட்டின் ஒரு பகுதியாகும். 

நான் இதுவரை 8 ஆட்டத்துக்கு மட்டுமே கேப்டனாக பணிபுரிந்துள்ளேன். ஆசிய கோப்பை போட்டி மிகவும் சவாலானது. ஒவ்வொரு அணியிலும் திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர். இவ்வாறு தற்காலிக கேப்டன் கோக்லி தெரிவித்து உள்ளார். 

விராட் கோக்லி தலைமையில் இந்திய அணி 7 ஆட்டத்தில் வெற்றி பெற்று உள்ளது. ஒரு போட்டியில் தோற்றது. 

வங்காளதேசத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று கோலாகலமாக துவங்கியது. நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. 

இன்று நடக்க இருக்கும் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா மற்றும் போட்டியை நடத்தும் வங்காள தேச அணிகள் மோதுகின்றன. 

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் மோதுகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்