முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் புதிய பிரதமருக்கு ஆதரவு: ஜோ பிடன் உறுதி

சனிக்கிழமை, 1 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மார்ச். 2 - உக்ரைனின் புதிய பிரதமருக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்று அந்நாட்டின் துணைஅதிபர் ஜோ பிடன் உறுதியளித்து உள்ளார். 

இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -

உக்ரைனின் இடைக்காலப் பிரதமர் அர்செனி யாட்சென்யுக்கை தொலைபேசியில் வியாழக்கிழமை தொடர்பு கொண்டு பேசி ய துணை அதிபர் பிடன், புதிய அரசு அமைப்பதற்கு வாழ்த்துதெரிவித்தார். 

உக்ரைனில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் ஒற்றுமையை நிலைநாட்டுவது மட்டுமின்றி அந்நாட்டு ஜனநாயகத்தைப் பேணிக்காக்கும் பொருட்டு வரும் மே மாதம் தேர்தலை எதிர்கொள்ள மக்களை தயார் படுத்த வேண்டியதும் முக்கிய அம்சமாகும். 

அந்த வகையில் வரும் பொருளாதார மற்றும் அண்டை நாடுகளுடனான நட்புறவு போன்ற சீர்திருத்த நடவடிக்கை களுக்கு அமெரிக்கா முழு ஆதரவளிக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உக்ரைனின் இறையாண்மைக்கு மதிப்பளிக்கப்படும் என்று தன்னிடம் தெரிவித்ததாக அமெரிக்க வெயுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி அண்மையில் தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில், கிரீமியா தன்னாட்சிப் பிராந்தியத்தில் உள்ள நாடாளுமன்றம் மற்றும் அரசு அலுவலக கட்டடங்களை

ரஷ்ய ஆதரவாளர்கள் ஆயுதங்களுடன் வந்து வியாழக் கிழமை கைப்பற்றிக்கொண்டனர். 

அதையடுத்து உக்ரைன் எல்லையில் ரஷ்யப் படைகள் பயிற்சி மேற்கொள்ளும் தவறான அணுகுமுறையை தவிர்க்க வேண்டும் என்று அந்நாட்டுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது. 

இதனிடையே உக்ரைனின் இடைக்காலப் பிரதமர் அர்செனி யாட்சென்யுக் இணைய தளப்பதிவில் கூறியதாவது _ 

ரஷ்ய கடற்படைத்தளம் அமைந்துள்ள கிரீமியா பிராந்தியம் செவாஸ்டோபோலில் உள்ள பெல்பெக் சர்வதேச விமான நிலையத்தில் தனது கடற்படையுடன் இணைந்து ரஷ்ய ராணுவம் தடையை ஏற்படுத்தி உள்ளது. 

இது ராணுவ படையெடுப்பு மற்றும்

ஆக்கிரமிப்புக்கு ஒப்பானது என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 

இந்த நிலையில் கிரீமியா பிராந்தியம் சிம்பெரோபோல் பகுதியில் ராணுவ உடையில் ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் ரோந்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆனால் ரஷ்ய பாதுகாப்புத் துறை இந்தத்

தகவல்களை மறுத்ததுடன், மேற்கொண்டு கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்து உள்ளது. 

ஐரோப்பிய யூனியனுடன் உக்ரைனை இணைக்க மறுத்து ரஷ்யாவுடன் இணக்கமாக சென்ற முன்னாள் அதிபர் விக்டர் யானுகோவிச் பதவி விலகக் கோரிய  எதிர்ப்பாளர்களின் நெருக்கடி முற்றியதால் தலைநகர் கீவை விட்டு யானுகோவிச் கடந்த சனிக்கிழமை வெளியேறினார். 

இந்த நிலையில், புதிய சீர்திருத்த தலைவர்கள் மேற்கத்திய நாடுகளுடன் நெருங்கிச் செல்வதால், ரஷ்யா எரிச்சலடைந்து உக்ரைனுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்