முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் ராமேஸ்வரம் - திண்டுக்கல் பயணிகள் ரயில் போக்குவரத்து

சனிக்கிழமை, 28 மே 2011      தமிழகம்
Image Unavailable

ராமேஸ்வரம்,மே.- 28 - பகல் நேரத்தில் ராமேஸ்வரம் - திண்டுக்கல் பயணிகள் ரயில் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என்று மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஏ.கே. கோயல் தெரிவித்தார்.  ராமேஸ்வரம் ரயில் நிலையத்தின் கட்டமைப்பு பணிகளை ஆய்வு மேற்கொள்ள ராமேஸ்வரம் வந்த மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது,  ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டோம். இதே போல் மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ரயில் நிலையங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் ராமேஸ்வரத்திற்கு நீண்ட தூர விரைவு ரயில் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது.
பயணிகளின் தேவைக்காக பகல் நேரத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை வழியாக திண்டுக்கல்லுக்கு விரைவில் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படும். மேலும் கூட்ட நெரிசலை சமாளிக்க ராமேஸ்வரத்தில் இருந்து காலை, மாலை நேரங்களில் புறப்படும் பயணிகள் ரயில்களில் மேலும் இரு பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்