சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெறாத இந்தியா

வெள்ளிக்கிழமை, 7 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

லண்டன்,மார்ச்.8 - உலகின் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்கள் தர வரிசைப் பட்டியலில் இந்தியா இடம் பெறவில்லை. 

இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் தரம் உலக அளவில் உள்ள கல்வி நிபுணர்களை திருப்திப்படுத்தவில்லை என்பதையே இது காட்டுகிறது.

உலக அளவில் உள்ள கல்வி நிறுவனங்களை அதன் செயல்பாடுகள் அடிப்படையில் தர வரிசைப்படுத்தி டைம்ஸ் உயர் கல்வி இதழ் 2014-ம் ஆண்டுக் கான பட்டியலை  வெளியிட்டது.

இந்த பட்டியலில் அமெரிக்கா வின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மீண்டும் முதலிடத்தை பிடித்துள் ளது. இரண்டாவது இடத்தில் மசாசூசெட்ஸ் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம், மூன்றாம் இடத்தில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், 4 வது இடத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், 5வது இடத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், 6வது இடத்தில் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்ளே ஆகியவை இடம் பெறு கின்றன.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகியவை இடம்பெற்ற பிரிக் அமைப்பு நாடுகளில் இந்தியா மட்டும் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெறாமல் போயுள்ளது. சீனாவிலிருந்து அதன் 2 கல்விநிறுவனங்கள் இந்த பட்டியலில் உள்ளன. ரஷ்யா, பிரேசிலில் இருந்தும் தலா ஒரு கல்வி நிறுவனம் இடம்பெற்றுள்ளது.

இது பற்றி இந்தியா கவலைப்பட்டாக வேண்டும் என்று பிடிஐ நிறுவனத்திடம் தெரிவித்தார் இந்த தர வரிசைப்பட்டியல் தயாரிப்புப் பிரிவுக்கான ஆசிரியர் பில் பட்டி.

அதிகாரபூர்வ தர வரிசையை 100 வரைக்கும் நிறுத்திக்கொண்டு இந்த பட்டியலை தயாரித்துள் ளோம். இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களின் செயல் பாடு, கற்பித்தல் திறன், ஆராய்ச் சித்துறை ஆகியவற்றை மதிப் பிடும்போது அதன் இடம் இந்த பட்டியலில் 200வது இடத்தில் இருக்கும் என்றார் பட்டி.

பிரதமர் மன்மோகன் சிங் படித்த பஞ்சாப் பல்கலைக்கழகம் 226-300 பிரிவில் வருகிறது. டெல்லி, கான்பூர், காரக்பூர், ரூர்கி ஆகிய இடங்களில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (ஐஐடி) 351- 400 இடங்களுக்குள் வருகின்றன.

இந்தியாவின் எதிர்காலம் வெற்றிகரமாக அமையவேண்டும் என்றால் அதற்கு உலக அளவில் போட்டி போட்டு தனித்துவத்தை காட்டக்கூடிய சிறப்பான பல்கலைக்கழகங்கள் அவசியம். 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் உயர் கல்வித்தரத்தை மேம்படுத்த இந்தியா முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இந்தியாவில் உயர் கல்வி நிலையங்கள் அதிகரிக்கப்பட் டுள்ள நிலையில் தரம் குறைந்து காணப்பட்டாலும் தரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம் பித்துள்ளது நல்ல அடையாளம் என்றார் பட்டி.

கல்வித் தரத்தின் முன்னேற் றத்தை கண்காணிப்பதிலும் சிறந்த கற்பித்தல் முறைகளை பகிர்ந்து கொள்வதிலும் இந்தியாவுக்கு உதவுவதற்காக டைம்ஸ் உயர் கல்வி இதழ் அதனுடன் இணைந்து செயல்பட்டுவருகிறது. இந்தியாவின் கல்வித் தரம் மேம்பாடு அடைவதற்கு உதவக்கூடிய காரணிகளை அது சுட்டிக்காட்டியுள்ளது, பல் கலைக்கழகத்துக்கு தரமான ஆசிரியர்களை ஈர்க்கவேண்டும் என்றால் கூடுதல் முதலீடு உள்ளிட்டவை அவசியமாகிறது. வெற்றிக்கு தனி வழிமுறை ஏதும் இல்லை. ஆனால் பல்வேறு காரணங்கள் உள்ளன என்றார் பட்டி.

இந்த கல்வித் தர வரிசைப் பட்டியலை தயாரிப்பதற்காக 150 நாடுகளில் 4 சுற்றுகளாக நடந்த பரிசீலனையில் 58117 விண்ணப்பங்கள் வந்தன. உயர் கல்வியில் 18 ஆண்டு அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள் மூலம் பெறப்பட்ட 10536 மதிப்பீடுகளை அடிப்படையாக கொண்டு 2014ம் ஆண்டு கல்விநிறுவன தரவரிசை முடிவுகள் வெளியிடப்பட்டன என்றார் பட்டி.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: