முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 நாட்ளாக உண்ணாவிரதம் இருந்த ஜெகன் மோகன் ரெட்டி மயக்கம்

வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011      அரசியல்
Image Unavailable

நகரி, பிப்.25 -  ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்த போது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட  ஏழை மாணவர்களும் மருத்துவம் என்ஜினியரிங் படிக்க  சிறப்பு திட்டம் கொண்டு வந்தார் அம்மாணவர்களுக்கு ஆகும் கல்வி செலவினை அரசே ஏற்றுக்கொண்டது. இதனால் பல லட்சம் ஏழை மாணவர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் கிரண்குமார் ரெட்டி தலைமையிலான அரசு கல்வித்தொகையை தனியார் கல்லூரிகளுக்கு செலுத்தவில்லை. இதனால் அங்கு படிக்கும் ஏழை மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது. அந்த கட்டணத்தை உடனே வழங்ககோரி ஜெகன் மோகன் ரெட்டி 7 நாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். கடந்த 18ம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கிய அவர் தொடர்ந்து 7 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உடல்நிலை மோசமாகி இருந்ததால் போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். ஆனால் அவர் தான் திட்டமிட்ட படி 7 நாள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்வேன் என்றார். இதனால் போலீசார் அவரை கைது செய்யவில்லை.
இதனை தொடர்ந்து 7 வது நாளாக நேற்று உண்ணாவிரதம் இருந்த அவர் மயக்கம் அடைந்தார். இதனால் அங்கிருந்த தொண்டர்கள்,மாணவர்கள் கலக்கம் அடைந்தனர். மேலும் மாணவர் ராஜேஷ் கூறும் போது ஜெகன்மோகன் ரெட்டி கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு உடனடியாக மாணவர்களுக்கு கல்வித்தொகையை வழங்க வேண்டும் என்றார்.
ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக நேற்றுமுன்தினம் ராஜமுந்திரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. நேற்று விசாகப்பட்டிணத்தில்  பந்த் நடத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்