முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவு கிரிக்கெட் தொடர் இந்திய டெஸ்ட் அணியில் 3 தமிழக வீரர்களுக்கு இடம்

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2011      விளையாட்டு
Image Unavailable

சென்னை, மே. - 29  - மேற்கு இந்தியத் தீவில் சுற்றுப் பயணம் செய்து கிரிக்கெட் போட்டிக ளில் பங்கேற்க இருக்கும் இந்திய டெஸ்ட் அணியில் 3 தமிழக வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். இது பற்றிய விபரம் வருமாறு -  இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவில் சுற்றுப் பயணம் செய்து ஒரு 20 -க்கு 20 போட்டி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.
ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் தேர்வு சென்னையில் நேற்று முன் தினம் நடந்தது.
ஒரு நாள் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட தோனி, ஜாஹிர்கான், ஆகியோர் டெஸ்ட் அணியில் இடம் பெற்று உள்ளனர். டெண்டுல்கர் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததால் தேர்வு பெறவில்லை. ஏற்கனவே ஒரு நாள் தொடரிலும் அவர் ஓய்வு கேட்டு இருந்தார்.
டெஸ்ட் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். முரளி விஜய், பத்ரிநாத், அபினவ் முகுந்த் ஆகிய தமிழக வீரர்க ள் 16 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இதில் பத்ரிநாத் ஏற்கனவே ஒரு நாள்போட்டிக்கான அணியில் இடம் பெற்று உள்ளார். விராட் கோக்லி முதல் முறையாக டெஸ்ட் அணியி ல் இடம் பெற்று உள்ளார்.
காம்பீருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மேற் கு இந்தியத் தீவு தொடர் முழுவதும் விளையாடவில்லை. இதனால் ஒரு நாள் தொடருக்கு ரெய்னா கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
யுவராஜ் சிங், உடல் நலக் கோளாறு காரணமாக விளையாடவில் லை. இதனால் காம்பீர், யுவராஜ் சிங்கிற்குப் பதிலாக ஒரு நாள் தொ டரில் ஷிகார் தவான், மனோஜ் திவாரி இருவரும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago