முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. அரசுக்கு முழு ஆதரவு புரட்சி பாரதம் கட்சி பொதுக்குழு தீர்மானம்

திங்கட்கிழமை, 30 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 30 - அ.தி.மு.க. அரசுக்கு முழு ஆதரவு கொடுக்க எங்கள் புரட்சி பாரதம் கட்சி பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்றுகட்சியின் மாநில தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்தார். இது குறித்த விபரம் வருமாறு: புரட்சிபாரதம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் அமிஞ்சிக் கரையில் நடந்து. கூட்டத்துக்கு மாநில தலைவர் nullவை ஜெகன்மூர்த்தி தலைமை தாங்கினார். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:​ தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சிக்கு புரட்சி பாரதம் முழு ஆதரவு தெரிவிக்கிறது. சமச்சீர் கல்வி முறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை nullநீக்கி சரியான சமச்சீர் கல்வி முறைகளை செயல்படுத்த கேட்டுக் கொள்கிறது.
 தமிழர்களை இலங்கையில் கொன்று குவித்து இனப்படுகொலை நடத்திய போர்க் குற்றவாளி ராஜ பக்சேவிற்கு தூக்குத் தண்டனை கிடைக்க மத்திய அரசை வலியுறுத்துகிறோம். இலங்கை தமிழர்களுக்கு முழுமையான அரசியல் அங்கீகாரம் கிடைக்க இந்திய அரசு தலையிட வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேயை கண்டித்து வரும் ஜூன் 6​ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
தமிழக மீனவர்கள் தினம் தினம் கொல்லப்படுவதை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மீனவர்கள் வாழ்வாதாரத்திற்கு உத்திரவாதம் கொடுக்க வேண்டும். தென்னிந்திய நதிகளை இணைத்து nullராதாரத்தை பெருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில், மத்திய அரசால் வழங்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் சிறப்பு பொருளாதார நிதி தவறான வழியில் மாற்று திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டது.
இது பற்றி நீnullதி விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய கோருவது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony