முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி நம்ப இயலாதவர்: விக்கிலீக்ஸ் தகவலால் சர்ச்சை

புதன்கிழமை, 19 மார்ச் 2014      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச்20  - மோடி நம்ப இயலாத நபர் என்று அமெரிக்காவைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு தெரிவி்த்ததாக விக்கி லீக்ஸ் இணைய தளம் வெளியிட்ட தகவலால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. 

விக்லீக்ஸ் இணையதளத்தில் மோடி ஊழலற்றவர் என்று குறி்ப்பிட்டிருந்ததாக முதலில் செய்தி வெளியானது. இதை அந்த இணையதளத்தின் நிர்வாகி அஸாங்கே மறுத்தார். தங்களது இணையதளத்தில் மோடியை ஊவலற்றவர் என்று கூறவில்லை என்றும் ஊழலற்றவர் என மக்கள் அவரை கருதுகிறார்கள் என்றுதான் கூறினோம் என்றும் குறிப்பிட்டார். இதற்கு பாஜக சார்பில்  அப்பாஸ் நக்வி கூறுகையில் மோடிக்கு யாரும் சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை என்று பதிலடி கொடுத்தார். 

அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு மோடி நம்ப இயலாத நபர், அவர் பீதி மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி ஆட்சியை பிடித்துள்ளார் என்று கூளியதாக குறிப்பிடப்பட்டுள்ளது விக்கிலீக்ஸ் இணையதளம். மோடியின் தலைமைப் பண்பு என்ற துணை தலைப்பில் மோடி மூர்க்கத் தனமானவர் என்றும் பாஜக நிர்வாகிகளிடம் கூட அவர் கண்ணியக் குறைவாக நடந்துகொள்வார் என்றும் வி்க்கிலீக்ஸ் வெளியிட்ட மற்றொரு  ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

                             

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்