முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒபாமா காப்பீட்டுத் திட்டம்: 60 லட்சம் பேர் பதிவு

சனிக்கிழமை, 29 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மார்ச் 30 - அமெரிக்காவில் ஒபாமா கேர் என்னும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இதுவரை 60 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.  அமெரிக்காவில் ஒபாமா கேர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்துக்கு குடியரசுக் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அனைவரையும் காப்பீட்டுத் திட்டத்தில் வற்புறுத்துவது, சாதாரன குடிம் கன்களின்  வாழ்க்கையில் அரசு தேவையின்றி தலையிடும் செயல் என்று அக்கட்சி குற்றம் சாட்டியது.

எனினும் இந்த திட்டம் பொதுமக்களிடையே பிரபலமானதையடுத்து, இதுவரை 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்வதற்கு மார்ச் 31-ஆம் தேதி கடைசி நாள் என்றும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்