இந்திய வம்சாவழி டாக்டருக்கு விருது

செவ்வாய்க்கிழமை, 1 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

ஹூஸ்டன், ஏப்.2 - அமெரிக்க வாழ் இந்திய இருதய நோய் நிபுணரான டாக்டர் சுமித் சுக், அமெரிக்க இருதய வியல் கல்லூரியால் வழங்கப்படும் கௌரவமிக்க சைமன்டாக்,விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் செடார்ஸ்-சினாய் இருதய நிறுவனத்தின் இயக்குநராக இருப்பவர் டாக்டர் சுமித் சுக். அவர் மாரடைப்புக்கு காரணமான இருதயத் துடிப்பு கோளாறுகளை சரி செய்வதிலும், பேஸ் மேக்கர், ரேடியோ கதிர்வீச்சு போன்றவற்றிலும் சிறப்பு நிபுணத்துவம் பெற்று விழங்குகிறார்.

அத்துடன், மருத்துவ பத்திரிக்கைகளுக்கும் ஏராளமான மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வருகிறார். இதைப் பாராட்டும் வகையில் சைமன் டாக் விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: