முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருமான வரித்துறைக்கு தவறான தகவல்: சௌத்ரி குற்றவாளி

சனிக்கிழமை, 5 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

சுவா, ஏப்.6 - தனது வங்கிக் கணக்கு குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தவறான தகவல் கொடுத்த தாகஃபிஜி தீவு முன்னாள் அதிபர் மகேந்திர சௌத்ரிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஃபிஜி தீவில் உள்ள முக்கிய எதிர்க்கட்சியின் தலைவரும், இந்தியாவைச் சேர்ந்தவருமான மகேந்திர சௌத்ரி, ஆஸ்திரேலியாவில் உள்ள தனது வங்கிக் கணக்கு குறித்து தவறான தகவல்களை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் அளித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சௌத்ரி குற்றவாளி என அத்தீவின் உயர் நீதிமன்ற நீதிபதி பால் மடிகன் தீர்ப்பளித்தார்.

இந்த குற்றசாட்டு காரணமாக செப்டம்பர் மாதம் அத்தீவில் நடக்க இருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை சௌத்ரி இழந்துள்ளார். ஃபிஜி தீவின் சட்டப்படி , குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நபர் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. ஃபிஜி தீவின் பிரதமராக 1999-ஆம் ஆண்டு சௌத்ரி பதவி எற்றார். ஆனால் அடுத்த ஆண்டே அவரது அரசு கலைக்கப்பட்டது.

இதேபோல், மற்றொரு முன்னாள் பிரதமரான லாய்செனியா காரஸும் 2012-ஆம் ஆண்டு ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டதால், தேர்தலில் போட்டியிட இயலாத நிலையில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்