எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை,ஏப்.11 - நெல்லையில் இன்று முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க.வேட்பாளர் கே.ஆர்.பி.பிரபாகரனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதனைத்தொடர்ந்து நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வக்கீல் கே.ஆர்.பி.பிரபாகரனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதற்காக இன்று பிற்பகல் சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாளை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்குகிறார். பின்பு நெல்லை நீதிமன்றம் எதிரே உள்ள பெல்நகர் மைதானத்திற்கு பிற்பகல் 2 மணிக்கு வந்து பேசுகிறார். நெல்லை வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க. சார்பாக பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாளை ஜான்ஸ் பள்ளி மைதானம் முதல் பெல்நகர் பொதுக்கூட்ட மேடை வரை சாலையின் இருபுறமும் டிஜிட்டல் வரவேற்பு போர்டுகள், வரவேற்பு வளைவுகள், அ.தி.மு.க. கொடி தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேடை அருகே பூக்கள், காய்கறிகள், பழங்கள், தென்னங்கதிர்கள் கொண்டு பிரமாண்ட வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரள செண்டை மேளம், பாண்டு வாத்தியங்கள், கொம்பு வாத்தியம் முழங்க பிரமாண்ட வரவேற்பு கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பூரண கும்ப மரியாதை, முளைப்பாரி வரவேற்பும் அளிக்கப்படுகிறது. கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள், அ.தி.மு.க. தொண்டர்கள் அமை சுமார் 40 ஆயிரம் சேர்கள் போடப்பட்டுள்ளன. அதுபோக சுமார் 1 லட்சம் பேர் பார்க்ககூடிய வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்திற்கு வரும் பொது மக்களுக்கு குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. வாகனங்களை நிறுத்த பாளை மருத்துவக்கல்லூரி மைதானம், சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மைதானத்திலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேடைக்கு கிழக்கு பகுதியில் முக்கிய பிரமுகர்கள் வாகனங்களை நிறுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேடைக்கு அருகே மற்றோரு மேடை அமைக்கப்பட்டு அதில் இன்னிசை கச்சேரி மற்றும் தேர்தல் பிரசார கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கழக அமைப்பு செயலாளர் பி.எச்.பாண்டியன், அமைச்சர் செந்தூர்பாண்டியன், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் முத்துகருப்பன் எம்.பி., தமிழக வீட்டு வசதி வாரிய தலைவர் முருகையாபாண்டியன் ஆகியோர் செய்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா வருகையையொட்டி நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று காலை முதலே பாளை ஜான்ஸ் பள்ளி மைதானம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானங்கள் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரன் தலைமையில் துணை கமிஷனர்கள் சுரேஷ்குமார், சாம்சன் ஆகியோர் மேற்பார்வையில் 1500க்கும் மேற்பட்ட போலீசார்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் சிறப்பு பாதுகாப்பு படையினரும் நெல்லை வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். கூட்டத்திற்கு வருபவர்களை சோதனை செய்ய மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் உள்ள வீடுகளின் மாடிகளிலும் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் அமைய ஓ.பி.எஸ். எங்களுடன் இருக்க வேண்டும்: டி.டி.வி. தினகரன்
27 Jan 2026மதுரை: ஜெயலலிதா ஆட்சி அமைய ஓ.பி.எஸ். எங்களுடன் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
கும்பகோணத்தில் இன்று நடைபெறும் இ.யூ.மு.லீக் மாநாட்டில்பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்புரை
27 Jan 2026சென்னை, கும்பகோணத்தில் இன்று (ஜன.28) நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறாா்.
-
சுற்றுலாத் துறையில் தனியார் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
27 Jan 2026சென்னை, வரும் 02.02.2026 மற்றும் 03.02.2026 அன்று நடைபெறவுள்ள "தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு-2026" தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் துவக்கி வைக்கப்படவுள்ளத
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் பாராளுமன்ற பட்ஜெட் தொடர் இன்று ஆரம்பம்
27 Jan 2026டெல்லி, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகிறது.
-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் போராட்டம்; 12 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை
27 Jan 2026மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக 12 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
-
கர்நாடகா மாநிலத்தில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி: சித்தராமையா, சிவக்குமார் கைது
27 Jan 2026பெங்களூரு: கர்நாடகாவில் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற சித்தராமையா, சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
-
சென்னை, கிண்டியில் ரூ.417 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான மருத்துவமனை: முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
27 Jan 2026சென்னை: சென்னை கிண்டியில் ரூ.417.07 கோடி செலவில் அமையவுள்ள குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
27 Jan 2026சென்னை, இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜன.
-
தே.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி.தினகரன்: த.வெ.க. தலைமை நிர்வாகி செங்கோட்டையன் விளக்கம்
27 Jan 2026சென்னை: த.வெ.க.வுடன் கூட்டணி வைக்கத்தான் டி.டி.வி.தினகரன் விரும்பினார் என்று த.வெ.க. தலைமை நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
கதாநாயகியாக இருக்கும்: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை குறித்து தஞ்சையில் கனிமொழி எம்.பி. பேச்சு
27 Jan 2026தஞ்சாவூர், தி.மு.க.
-
தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய வரலாறு படைக்கிறார் நிர்மலா
27 Jan 2026புதுடெல்லி, இந்திய பாராளுமன்றத்தில் வருகிற 1-ந்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்.
-
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் முன்னேறாது உலக மகளிர் உச்சி மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Jan 2026சென்னை, பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு என்று உலக மகளிர் உச்சி மாநாட்டை துவக்கி வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் முன்னேறாது என்ற
-
18 ஆண்டுகால பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியா - ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
27 Jan 2026புதுடெல்லி, இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், கையெழுத்தானதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
-
தென்தமிழகத்தில் ஐந்து நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
27 Jan 2026சென்னை: தென்தமிழகத்தின் வரும் பிப்.1 வரை 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
த.வெ.க.வுடன் ராமதாஸ் கூட்டணியா?
27 Jan 2026சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பு தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ வர்த்தக ஒப்பந்தம் முடிவானது: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
27 Jan 2026புதுடெல்லி, இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான ஒப்பந்தங்களின் தாய் வர்த்தக ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய வரலாறு படைக்கிறார் நிர்மலா
27 Jan 2026புதுடெல்லி: இந்திய பாராளுமன்றத்தில் வருகிற 1-ந்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்.
-
ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்: பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைக்கும்படி கோரிக்கை
27 Jan 2026டெல்லி, பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு நேற்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.


