எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொழும்பு, பிப். 26 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கொழும்பு நகரில் நடக்க இருக்கும் லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை பாகிஸ்தான் அணி சமாளிக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10 - வது லீக் ஆட்டம் இல ங்கையின் தலைநகரான கொழும்புவில் இன்று நடக்க இருக்கிறது. இதில் ஏ பிரிவைச் சேர்ந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத ஆயத்தமாக உள்ளன.
இலங்கை அணி தொடக்க ஆட்டத்தில் 210 ரன்னில் கனடாவை தோற் கடித்தது. பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் 205 ரன்னில் கென் யாவை வீழ்த்தி இருந்தது.
இதனால் இரு அணிகளும் 2-வது வெற்றியைப் பெறும் ஆர்வத்தில் உள்ளன. உள்ளூரில் விளையாடுவதால் இலங்கை அணிக்கு கூடுதல் வாய்ப்பு இருக்கிறது. உள்ளூர் ரசிகர்களின் பலத்த ஆதரவும் கிடைக் கும்.
கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜெயவர்த்தனே சிறப்பாக விளை யாடி சதம் அடித்தார். இதே போல கேப்டன் சங்கக்கரா, தில்ஸான், ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
பந்து வீச்சில் மலிங்கா, குலசேகரா, பெர்னாண்டோ ஆகியோர் கல க்க ஆயத்தமாக உள்ளனர். இவர்களுக்கு பக்கபலமாக உலகின் சிறந்த ஆப்ஸ்பின்னரான முரளீதரன் மற்றும் மென்டிஸ் ஆகியோர் உள்ளனர்.
இலங்கை அணி ஐ.சி.சி.யின் தரவரிசையில் 3 -வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு தரவரிசையில் 8 -வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி எல்லா வகையிலும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது.
பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை, அக்மல் சகோதரர்கள், மிஸ்பா உல் ஹக் மற்றும் யூனிஸ் கான் ஆகியோர் நல் ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் கேப்டன் அப்ரிடி சிறப்பாக பந் து வீசி வருகிறார்.
இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆசிய கோ ப்பை போட்டியில் மோதின. இதில் இலங்கை அணி 16 ரன்னில் வெ ற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இன்றை ய போட்டி பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்ப கல் 2.30 மணிக்கு போட்டி துவங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் சேனலில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


