முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் கூரியத் மாநாடு தலைவர்கள் திடீர் கைது

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர்,மே.4​- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஹூரியத் மாநாடு தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாத இயக்கங்களின் கூட்டமைப்புதான் ஹூரியத் மாநாடு. காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்கும் வேலையில் ஈடுபட இவர்கள் திட்டமிட்டிருந்ததையொட்டி ஹூரியத் மாநாடு தலைவர்கள் கிலானி, மீர்வெஸ்ஜ், ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு சுற்றுலா வரும் பயணிகளிடத்தில் மாநிலத்தில் நிலவும் மனித உரிமை மீறல்கள் மற்றும் இங்கு நிலவும் சூழ்நிலை குறித்த குறிப்புகள் அடங்கிய நோட்டீஸ்களை விநியோகிக்க கிலானி திட்டமிட்டிருந்தார். வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்னர் ஊர்வலத்திற்கு மீர்வாஜ் ஏற்பாடு செய்திருந்தார். இதனால் சமூக விரோதிகள் இதை பயன்படுத்தி அமைதி சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று கருதி இவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony