முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2015-ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு சங்ககரா ஓய்வு

வெள்ளிக்கிழமை, 2 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், மே 3 - இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சங்ககரா. இலங்கை அணிக்கு 20 ஓவர் உலக கோப்பையை பெற்றுக் கொடுத்த பிறகு அவர் 20 ஓவர் போட்டியில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார்.

இதற்கிடையே ஒருநாள் போட்டியிலிருந்து சங்ககரா ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார். 2015-ஆம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பைக்கு பிறகு ஒநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இதுகுறித்து சங்ககரா கூறியதாவது: 2015-உலக கோப்பை போட்டி எனது கடைசி ஒருநாள் போட்டியாகும். டெஸ்ட் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன். இந்த ஆண்டு முடிவில் 37 வயதை நேருங்குவேன். தேர்வு குழுவினரிடம் பேசிய பிறகு இறுதி முடிவை அறிவிப்பேன். இலங்கை அணியில் விளையாடுவதில் பெருமை படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

சங்ககரா இங்கிலாந்தில் உள்ள துர்காம் கவுண்டி கிளப்பில் தற்போது ஆடி வருகிறார். உலகில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக சங்ககரா உள்ளார். ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் தெண்டுல்கள், பாண்டிங், ஜெயசூர்யா, ஆகியோருக்கு அடுத்தப்படியாக 4-வது இடத்தில் சங்ககரா உள்ளார்.

சங்ககரா 369 ஆட்டத்தில் விளையாடி 12,500 ரன் எடுத்துள்ளார். ரன் ரேட் சாசரியாக 40.45 ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்