திருச்சி மேற்கு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல்

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஜூன்.5 - தமிழகம், புதுவையில் காலியாக உள்ள திருச்சி மேற்கு, இந்திராநகர் சட்டப் பேரவை தொகுதிகளிக்கு விரைவில் இடைத் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்தார். 

காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 6 மாதத்தில் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இது தொடர்பாக மாநில தேர்தல் அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும். தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையத்தில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தேர்தலின் போது புதிய வழிகாட்டுதலும், விதிமுறைகளையும் தேர்தல் ஆணையம் வகுத்து செயல்படுத்தி வருகிறது. 

பீகார் சட்டப் பேரவை தேர்தலின் போது தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் நல்ல பலனை அளித்தது. இனி வரும் காலங்களில் இந்த நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேலும் கடுமையாக்கி தேர்தல்களை வெளிப்படையாக நடத்தும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: