முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரதா ராயின் ஜாமீன் மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

செவ்வாய்க்கிழமை, 6 மே 2014      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,மே.7 - சஹாரா குழுமத்தின் அதிபர் சுப்ரதா ராயின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜாமீன் அளிக்க ரூ.10 ஆயிரம் கோடி செலுத்த உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்து இருந்தது.

பொதுமக்களிடம் பெற்ற 20000 கோடி ரூபாய் நிதியை முறைகேடு செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து சஹாரா நிறுவன தலைவரான சுப்ரதா ராய் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து தன்னை ஜாமீனில் விடுவிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் ராய் மனு தாக்குதல் செய்தார். ஜாமீன் அளிக்க ரூ.10 ஆயிரம் கோடி செலுத்த உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்து இருந்தது. அதன்படி நீதிமன்றம் குறிப்பிட்ட தொகையை பிணையாக செலுத்த தயாராக உள்ளதாகவும் ராய் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எஸ் ராதாகிருஷ்ணன் அடங்கிய அமர்வு, நேற்று சுப்ரதா ராயின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும் அந்த உத்தரவில், "சிறப்பு விசாரணை குழு, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் அனைத்து உத்தரவுகளையும் சஹாரா நிறுவனம் மீறியுள்ளது. எங்களது முந்தைய உத்தரவுகளையும் அவரது குழுமமும் அவமதித்துள்ள நிலையில், இந்த ஜாமீன் மனுவுக்கு எந்தத் தகுதியும் இருப்பதாக தெரியவில்லை.

இதுபோன்ற நடத்தையை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டத்துக்கு உட்பட்டே சுப்ரதா ராய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைச் சிறைக்கு அனுப்புவதற்கு முன்னர் தேவையான அனைத்து சட்டபூர்வ நடைமுறைகளையும் நாங்கள் பின்பற்றியுள்ளோம்.

வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருப்பி தருவதற்கான புதிய திட்டத்தை சுப்ரதா ராய் அறிவிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!