பெரம்பலூரில் இன்று அ.தி.மு.க. மனித சங்கிலி பேரணியுடன் ஆர்ப்பாட்டம்

சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011      அரசியல்
jayalalitha2

 

சென்னை, பிப்.26 - 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் கருணாநிதி குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தியும், இந்த ஊழலை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையிலும், பெரம்பலூர் மாவட்டம் அ.தி.மு.க. சார்பில் மனிதச் சங்கிலி பேரணியுடன் கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  இன்று (26.2.2011 ​ சனிக் கிழமை) நடைபெறும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் மூலம் கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும் இந்திய நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து, நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழகத்திற்கு பெருத்த அவமானத்தை விளைவித்துள்ளனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இந்தியாவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.  மத்திய கண்காணிப்பு ஆணையமும் இதில் முறைகேடு நடைபெற்றதாக தெரிவித்தது. சினிமா டிக்கெட் விற்பனை போல 2ஜி ஒதுக்கீடு விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக டெல்லி உயர் nullநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. ஆனால் கருணாநிதியோ, இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை அனுமானத்தின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், ராசாவின் நடவடிக்கையால் குறைந்த கட்டணத்தில் கைபேசியில் பேசுகின்ற சூழ்நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டது என்றும் மனம் போன போக்கில் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை தெரிவித்தார்.  இது மட்டுமல்லாமல், நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவையில்லை என்ற கருத்தையும் வெளிப்படுத்தி, அதற்கும் முட்டுக்கட்டை போட்டார்.  இருப்பினும், எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தல் காரணமாக கருணாநிதியின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. கிணறு வெட்ட nullதம் புறப்பட்டது போல, இந்த ஊழலை கிளறக் கிளற புதுப்புது ஊழல்கள் தொடர்ந்து வெளி வந்த வண்ணம் உள்ளன. வோல்டாஸ் நில விவகாரம், கோத்தகிரியில் வின்சார் எஸ்டேட், nullநீரா ராடியா  ராசாத்தியுடனான உரையாடல், nullநீரா ராடியா  கனிமொழியுடனான உரையாடல், அமைச்சர் பதவியை பெற்றுத் தருவதற்காக தயாளு 600 கோடி ரூபாய் பெற்றது, nullநீரா ராடியா கருணாநிதிக்கு முன்கூட்டியே அறிமுகமான விவரம் என ஒன்றன் பின் ஒன்றாக விஷயங்கள் வெளி வந்தன. 

இந்தச் சூழ்நிலையில் உச்ச nullநீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடைபெற்று வரும் மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமத்தை வாங்கிய டெனமிக்ஸ் பால்வா நிறுவனத்திடமிருந்து  கருணாநிதியின் மனைவி தயாளு மற்றும் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோரை பங்குதாரர்களாகக் கொண்டுள்ள கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிக்கு 214 கோடி ரூபாய் கொடுக்கப்பட்ட விவகாரம் தற்போது வெளி வந்துள்ளது.  இதிலிருந்து கருணாநிதியும், அவரது குடும்ப உறுப்பினர்களும் 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் மூலம் வெகுவாக பயனடைந்து இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.  எனவே, 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் வெகுவாக பயனடைந்த கருணாநிதி குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், இந்த மெகா ஊழலை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் பெரம்பலூர்  மாவட்டம் அ.தி.மு.க. சார்பில், இன்று (26.2.2011  சனிக் கிழமை) காலை 9 மணியளவில், பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகில் மனிதச் சங்கிலி பேரணியுடன் கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம்,  இலக்கிய அணிச் செயலாளர்  வைகைச்செல்வன்  தலைமையிலும், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ப.இளவழகன், மாநிலங்கள் அவை குழுச் செயலாளர் ஆ.இளவரசன் மற்றும் வரகூர் தொகுதி  சட்டமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும்,  உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.

தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: