பா.ஜ.க.வினர் மீது தடியடி - வெங்கையா நாயுடு ஆவேசம்

சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011      அரசியல்
M-Venkaiah-Naidu

 

புது டெல்லி,பிப்.26 - தலைநகர் டெல்லியில் ஊழலுக்கு எதிராக நடந்த கண்டன பேரணியின் போது பா.ஜ.க. தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது குறித்து பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நேற்று பா.ஜ.க.வினர் பிரச்சினை எழுப்பினர். லோக்சபை, ராஜ்யசபை ஆகிய இரு சபைகளிலும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ராஜ்யசபை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. 

முன்னதாக மேல்சபையில் கேள்வி நேரம் தொடங்கியதும் பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு எழுந்து தமது கட்சியினர் மீது நடத்தப்பட்ட தடியடி விவகாரம் குறித்து பேசினார். இந்த விவகாரம் குறித்து பேசிய வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். இது ஜனநாயக நாடா, அல்லது சர்வாதிகார நாடா? என்று கேள்வி எழுப்பிய நாயுடு, நேற்றைய சம்பவம் தமக்கு எமர்ஜென்சி நாட்களை நினைவுபடுத்துவதாகவும் குறிப்பிட்டார். தடியடியில் பலர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். ஊழலை எதிர்த்தால் இப்படித்தான் அடிப்பீர்களா? இதற்கு உள்துறை அமைச்சர் சிதம்பரம் நிச்சயமாக இங்கு வந்து பதிலளிக்க வேண்டும். இது ஒரு முக்கியமான பிரச்சினை என்றும் நாயுடு குறிப்பிட்டார். டெல்லியில் நடந்த தடியடியில் டெல்லி பா.ஜ.க. தலைவர் வீஜேந்திரகுப்தா தாக்கப்பட்டதாகவும் வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: