முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.டி.பி. டென்னிஸ்: பொபண்ணா-குரேஷி ஜோடி சாம்பியன்

செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

ஹாலே, ஜூன். 14 - ஜெர்மனியின் ஹாலே நகரில் நடைபெற்று வந்த ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் பொபண்ணா மற்றும் குரேஷி ஜோடி இறுதிச் சுற்றில் வெற் றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 

ஆடவருக்கான ஏ.டி.பி. சுற்றுப் பயணப் போட்டிகளில் ஒன்றான ஹாலே மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி ஜெர்மனி நாட்டில் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்தது. 

இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் களத்தில் குதித்தனர். கடந்த ஒரு வார காலமாக நடந்து வந்த இந்தப் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது. 

சர்வதேச அளவில் முக்கிய போட்டிகளில் ஒன்றான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். 

ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர்க ளில் ஒருவரான ரோகன் பொபண்ணா, பாகிஸ்தான் வீரர் அய்சம் அல் ஹக் குரேஷியுடன் இணைந்து ஆடினார். 

பொபண்ணா மற்றும் குரேஷி ஜோடி இறுதிச் சுற்றில் ராபின் ஹாஸ் மற்றும் மிலோஸ் ரோனி இணையுடடன் பலப்பரிட்சை நடத்தியது. இந்த ஆட்டம் 3 செட் வரை நீடித்தது. 

3 செட் கொண்ட பரபரப்பான இந்த ஆட்டத்தின் இறுதியில், இந்திய மற்றும் பாகிஸ்தான் ஜோடி அபாரமாக ஆடி, 7 - 6 (9), 3 - 6, 11 - 9 என் ற செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றியது. 

இவர்கள் இருவரும் இணைந்து பெறும் முதல் ஏ.டி.பி. பட்டம் இது வாகும். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 19 நிமிடத்தில் முடிவடைந்தது. இந்தப் போட்டி டயர் - 2 வகையிலான போட்டியாகும். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் ஜெர்மனியைச் சேர்ந்த பிலிப் கோல்ஸ் ரீபர் மற்றும் சகநாட்டு வீரரான பெட்ஸ்னர் இருவ ரும் பட்டத்திற்காக போராட்டம் நடத்தினர். 

இந்தப் போட்டியின் முதல் செட்டில் பிலிப் கடும் போராட்டத்திற்குப் பிறகு, 7 - 6 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றினார். பின்பு நடந்த 2 -வது செட்டில் 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்தார். 

அப்போது எதிர்த்து விளையாடிய சகநாட்டு வீரரான பெட்ஸ்னர் காய ம் காரணமாக ஓய்வு பெற்றார். இதனால் இந்தப் போட்டியில் பிலிப் கோல்ஸ் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்