உலகக் கோப்பை - வங்கதேசம் அயர்லாந்து அணியை வீழ்த்தியது

Bangladesh1

 

மிர்பூர், பிப். 27 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிர்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வங்கதேச அணி 27 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி முன்னிலை பெற்று உள்ளது. குறைந்த ஸ்கோரைக் கொண்ட இந்தப் போட்டியில் வங்கதேச அணி தரப்பில், துவக்க வீரர் தமீம் இக்பால், முஸ்பிகர் ரகீம், ரகிபுல் ஹாசன் மற்றும் நயீம் இஸ்லாம் ஆகியோர் நன்கு பேட்டிங் செய்து அணி கெளரவமான ஸ்கோரை எடுக்க உதவினர். 

பின்பு பெளலிங்கின் போது, ஷபியுல் இஸ்லாம், ஷாகிப் அல் ஹாச ன் மற்றும் மொகமது அஸ்ரப்புல் ஆகியோர் நன்கு பந்து வீசி அணிக் கு வெற்றி தேடித் தந்தனர். 

இந்தப் போட்டியில் அயர்லாந்து அணியின் பந்து வீச்சு மற்றும் பீல்டி ங் சிறப்பாக இருந்தது. இதனால் அந்த அணி வங்கதேச அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தியது. ஆனால் பின்பு பேட்ஸ்மேன்கள் ஏமா ற்றியதால் அந்த அணி தோல்வி அடைந்தது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாக்கா அருகே மிர்பூரில் உள்ள ஷெரே பங்க்ளா தேசிய அரங்கத்தில் 9 -வது லீக் ஆட்டம் நடந் தது. இதில் குரூப் பி யைச் சேர்ந்த வங்காளதேசம் மற்றும் அயர்லாந் து அணிகள் மோதின. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 205 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் கூட அரை சதத்தை தாண்டவில்லை. ஆனால் 4 வீரர்கள் கால் சதத்தை தாண்டினர். 

துவக்க வீரர் தமீம் இக்பால் அதிகபட்சமாக, 43 பந்தில் 44 ரன்னை எடு த்தார். இதில் 7 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் போத்தா வீசிய பந்தில் போர்ட்டர் பீல்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

அடுத்தபடியாக, ரகிபுல் ஹாசன் 69 பந்தில் 38 ரன்னை எடுத்தார். இதி ல் 1 பவுண்டரி அடக்கம். தவிர, கீப்பர் முஸ்பிகர் ரகீம் 66 பந்தில் 36 ரன்னையும், நயீம் இஸ்லாம் 38 பந்தில் 29 ரன்னையும், கேப்டன் ஷா கிப் அல் ஹசன் 16 ரன்னையும் எடுத்தனர். 

அயர்லாந்து அணி தரப்பில், போத்தா 32 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். டாக்ரெல் மற்றும் ஜான்ஸ்டன் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். தவிர, மூனே ஒரு விக்கெட் எடுத்தார். 

அயர்லாந்து அணி 206 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை வங்கதேச அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 45 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 178 ரன்னை எடுத்தது. 

இதனால் வங்கதேச அணி 27 ரன் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது. இது அந்த அணிக்கு முதல் வெற்றியாகும். 2 -வது லீக் போட்டியில் வெற்றி பெற்ற அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்த து குறிப்பிடத்தக்கது. 

அயர்லாந்து அணி சார்பில், என். ஓ பிரைன் அதிகபட்சமாக, 52 பந்தில் 38 ரன்னை எடுத்தார். கே. ஓபிரைன் 36 ரன்னையும், போத்தா 22 ரன் னையும், கேப்டன் போர்ட்டர் பீல்டு 20 ரன்னையும், ஜாய்ஸ் 16 ரன் னையும் எடுத்தனர். 

வங்கதேச அணி தரப்பில், ஷபியுல் இஸ்லாம் 21 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். ஷாகிப் அல் ஹசன் மற்றும் மொகமது அஸ்ர ப்பு ல் ஆகியோர் தலா 2 விக்கெட்டையும், அப்துர் ரகீம் மற்றும் நயீம் இஸ்லாம் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியி ன் ஆட்டநாயகனாக தமீம் இஸ்லாம் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ