முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.17 - நினைவகங்களை பராமரித்து தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை செயலாளர் டி.என்.இராமநாதன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மற்றும் அரசு சிறப்பு செயலாளர் முனைவர் மூ.இராசாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் செந்தமிழன் பேசும்போது தெரிவித்ததாவது:-

வாழ்ந்து மறைந்த மக்கள் மனதில் மறையாது இடம் பிடித்த தலைவர்களின் நினைவைப்போற்றும் வகையில் 51 நினைவகங்கள், 5 நினைவுத்தூண்கள், 3 அரங்ககங்கள், ஒரு நினைவுப்பூங்கா, மற்றும் புதியதாக கட்டப்பட்டு வரும் 9 நினைவகங்கள் ஆகியவற்றை பாதுகாத்து, பராமரித்து வருகின்ற பணியை செய்தித்துறை செய்து வருகிறது.

நினைவகங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற வளாகங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும். அவ்வப்போது ஏற்படும் பழுதுகளை சீரமைக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு உடனடியாக அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீண்டகால தேவைகள் குறித்து பட்டியல் மற்றும் மதிப்பீடு தயார் செய்து இம்மாதம் 30-ம் தேதிக்குள் அரசுக்கு அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறது. நினைவகங்களில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்ப செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா தலைமையில்  அமைந்திருக்கின்ற  இந்த அரசு மக்களுக்கு பயனளிக்கக்கூடிய புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் பயன்கள், பொதுமக்களை சென்றடைகின்ற வகையில் மக்கள் தொடர்பு அலுவலர்கள் விரைந்து பணியாற்றிட வேண்டும்.

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் திட்டங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் தயங்காமல் என்னை நேரிடையாக தொடர்பு கொண்டு தெரிவித்தால் அதுபற்றி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் நிதித்துறை இணைச் செயலாளர் பெ.ரவிநாராயணன், பொதுப்பணித்துறை இணை தலைமை பொறியாளர் (கட்டடம்) வெ.ரெங்கசாமி, சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் பொ.முருகேசன், தமிழ்நாடு சாலைக்கட்டமைப்பு மேம்பாட்டுக்கழக கண்காணிப்பு பொறியாளர் எஸ்.கிரி, தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழக துணை மேலாளர் ஜெயசீலன், செய்தித்துறை இணை இயக்குனர் தங்க புகழேந்தி, துணை இயக்குநர்கள் எழிலழகன், அசோகன், உதவி இயக்குநர்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony