முக்கிய செய்திகள்

ரஜினியை சந்தித்து நலம் விசாரித்த சிரஞ்சீவி

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011      சினிமா
Image Unavailable

சென்னை,ஜூன்.24   - சிங்கப்பூரில் ஓய்வெடுத்து வரும் நடிகர் ரஜினிகாந்தை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும், கன்னட நடிகர் அம்பரீஷூம் சந்தித்து நலம் விசாரித்தனர். சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்புக்காக ரஜினிகாந்த் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 15 ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். இதையடுத்து சிங்கப்பூரில் அவர் ஓய்வெடுத்து வருகிறார். ரஜினிகாந்தை பார்க்க அவரது நெருங்கிய நண்பர்களும், நடிகர்களுமான சிரஞ்சீவி, அம்பரீஷ் ஆகியோர் சிங்கப்பூர் சென்றனர். ரஜினிகாந்த் தங்கியுள்ள குடியிருப்புக்கு சென்று அவரிடம் உடல் நலம் விசாரித்தனர். ரஜினி குணமடைந்து வருகிறார். சென்னை திரும்புவதற்கு ஆர்வமாக இருக்கிறார் என்று சிரஞ்சீவி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: