தயாநிதி மாறன் காலத்தில் நடந்த முறைகேட்டை விளக்கினேன் - அருண்ஷோரி

சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011      அரசியல்
25arunshourie1

புது டெல்லி,பிப்.27- 2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில் தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த காலத்திலேயே முறைகேடுகள் நடந்ததாக சி.பி.ஐ. அதிகாரிகளிடம் விளக்கிக் கூறினேன் என்று முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் அருண்ஷோரி கூறினார். 2 ஜி அலைக்கற்றை ஊழல் விசாரணைக்காக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜரானார் அருண்ஷோரி. விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் உண்மையான விவகாரம் ஊழல்தான். இந்த விசாரணைக்கு என்னால் முடிந்த அளவு சி.பி.ஐ.க்கு உதவுவேன். எனக்கு தெரிந்த விவரங்களை 50 பக்க ஆவணமாக சி.பி.ஐ.யிடம் கொடுத்துள்ளேன். இந்த ஆவணத்தில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை கொள்கை எந்த அடிப்படையில் பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது என்பதை விளக்கி உள்ளேன். 

சி.பி.ஐ. அலுவலகத்திற்கு யார் யார் வருகிறார்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியாகின்றன. ஆனால் இந்த பட்டியலில் பிரதமர் பெயர் இல்லை. தமிழக முதல்வர் கருணாநிதி பெயர் இல்லை. தயாநிதி மாறன் காலத்தில் நடந்த முறைகேடுகளை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் விளக்கி உள்ளேன். ஆனால் மாறன் மட்டும் இன்னும் மந்திரியாக இருக்கிறார்.  இதற்கு சி.பி.ஐ.யை குறை சொல்ல முடியாது. அவர்களை சுதந்திரமாக நடப்பதற்கு அனுமதித்தால் எல்லா உண்மைகளையும் வெளியே கொண்டு வந்து விடுவார்கள் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: