முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானில் குண்டு வெடித்து 35 பேர் பரிதாப பலி

திங்கட்கிழமை, 27 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

 

காபூல், ஜுன் 27 - ஆப்கானிஸ்தான் மருத்துவமனை ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் 35 பேர் பரிதாபமாக பலியானார்கள். ஆப்கான் தலைநகர் காபூலில் இருந்து 40 கி.மீ.தொலைவில் அஸ்ரா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரில் வந்த தலிபான் தற்கொலைப் படை தீவிரவாதியை சந்தேகத்தின்பேரில் பாதுகாப்பு வீரர்கள் தடுத்து நிறுத்தினர். ஆனால் அந்த தீவிரவாதி காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்று மருத்துவமனை கட்டிடத்தின் மீது பயங்கரமாக மோதி வெடிக்கச் செய்தான். 

இந்த பயங்க விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள், பார்வையாளர்கள் மற்றும் மருத்துவமனை சிப்பந்திகள் ஆகியோர் உள்பட 35 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். மேலும் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை ராணுவ ஹெலிகாப்டரில் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆப்கானிஸ்தானில் ஆட்சியை இழந்த தலிபான் தீவிரவாதிகள் நேட்டோ படைகள் மற்றும் உள்நாட்டு போலீசாருக்கு எதிரான தாக்குதல்களை தொடர்ந்து வருவது தெரிந்ததே. இப்போது இந்த தாக்குதல் பொதுமக்கள் மீதும் திரும்பியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வடக்கு ஆப்கானிஸ்தானில் கானாபாத் மாகாணத்தில் ஒரு மார்க்கெட்டில் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 10 பேர் உடல் சிதறி பலியானார்கள். 25 பேர் படுகாயம் அடைந்தனர். தலிபான்களின் பொதுமக்கள் மீதான இத்தகைய தாக்குதல்களால் ஆப்கானில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்