முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவ கிராமங்களுக்கு தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டுகோள்

புதன்கிழமை, 29 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.29 - திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள மீனவக் கிராமங்களான உவரி, கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை,தோமையர்புரம், கூத்தங்குளி, கூட்டப்பனை, கூடுதாழை உள்ளிட்ட பத்து கிராமங்களின் மீனவக் குடியிருப்புகள் ஓங்கி எழும் அலைகளாலும் கடல் சீற்றத்தாலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

சுமார் எட்டாயிரம் மீனவக் குடும்பங்களின் குடியிருப்புகள் எந்த நேரத்திலும் கடல் அரிப்புகளாலும் எழும் பேரலைகளாலும் மூடப்பட்டு விடுமோ என்ற அச்சமும் பீதியும் மீனவ மக்கள் மத்தியில் நிலவுகிறது.

சுனாமிப் பேரலைத் தாக்குதலுக்குப் பின்னர் கடல் அரிப்பு அதிகமாகி, கடலை ஒட்டிய நிலப்பரப்பு nullநீரில் மூழ்கி கடலாக மாறிவிட்டதன் விளைவாகக் குடியிருப்புகள் மீது கடல் நீnullர் புகுந்துவிடும் பேரபாயம் உருவாகி உள்ளது.

அன்றாட வாழ்க்கைப் பயணத்திற்கு உயிரைப் பணயம் வைத்து கடலில் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் வீடு திரும்பினால் நிம்மதியாக ஓய்வு எடுக்க முடியாத அச்சத்தின் பிடியில் சிக்கி இருக்கிறார்கள். மீனவக் குடும்பத்தினர் நாள்தோறும் உயிர்ப் பயத்தில் வாடுகின்றனர்.

உவரிக் கிராமத்தின் மீனவக் குடியிருப்புகளை 26.06.2011 அன்று நான் நேரில் சென்று பார்வையிட்டபோது பேரபாயம் அக்குடியிருப்புகளைச் சூழ்ந்திருப்பதை உணர்ந்தேன்.

தமிழக அரசு மேற்குறிப்பிட்ட கிராமங்களில் தூண்டில் வளைவுகள் அமைத்து கடலின் சீற்றத்தை ​ பேரலை எழுவதை மட்டுப்படுத்தத் தூண்டில் வளைவுகள் அமைக்கத் திட்டமிட்டது. உவரி ஊர் மக்களின் பொது நிதியில் இருந்து எட்டு லட்சம் ரூபாய் செலவில் இன்டோமார் எனும் கடல்சார் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் ஆய்வு செய்ததில் ரூ. 48 கோடி செலவில் உவரியில் சிறிய துறைமுகம் - ​படகு தங்கு தளத்துடன் கூடிய தூண்டில் வளைவுகள் அமைத்திடப் பரிந்துரை செய்துள்ளன.

முறையாக, அறிவியல்nullர்வமாக ஆராய்ச்சி நிலையத்தால் ஆய்வு செய்து அரசுக்கு அளித்துள்ள அறிக்கையை ஏற்று, மத்திய ​ மாநில அரசுகளின் இயற்கைப் பேரிடர் நிதி உள்ளிட்ட நிதி ஆதாரங்களை ஒரு சிறப்பு நிகழ்வாகக் கருதிப் பயன்படுத்தி, உவரியில் சிறிய துறைமுகம் ​ படகு தங்கு தளத்துடன் இணைந்த தூண்டில் வளைவு அமைத்திடவும், ஆய்வுக்குச் செலவிட்ட பொது மக்கள் நிதியான எட்டு லட்சம் ரூபாயை மக்களுக்கே திருப்பி வழங்கிடவும் மேற்குறிப்பிட்ட இதர மீனவக் கிராமங்களிலும் இன்டோமார் கடல் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் தமிழக அரசே தனது செலவில் உடனடி ஆய்வு மேற்கொண்டு தூண்டில் வளைவுகளைத் தக்க

விதத்தில் அமைத்து, ஏழை மீனவக் குடும்பங்களுக்கு நிகழப் போகும் ஆபத்தில் இருந்து வருமுன் காக்கும் வகையில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்