முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநகராட்சி கூட்டம்: கவுன்சிலர் - மேயர் மோதல்

வியாழக்கிழமை, 30 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன்.30 - ​காங்கிரஸ் - தி.மு.க. மோதல் மாநகராட்சி வரை வந்துவிட்டது. சென்னை மாநகராட்சி சுகாதார துறையில் அதிக அளவு முறைகேடு நடப்பதாக காங்கிரஸ் கவுன்சிலர் குற்றம்சாட்டினார்.

சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் சத்யபாமா, கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் nullஜ்ஜிய நேரத்தில் உறுப்பினர்கள் பேசினார்கள். 

ருக்மாங்கதன் (காங்.): சென்னை மாநகராட்சி பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து சிறந்து விளங்குகிறார்கள். மேலும் கல்வியின் தரத்தை உயர்த்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். தனியார் பள்ளிகளை போன்று சிறந்த கட்டமைப்பு வசதிகளை சென்னை பள்ளிகளுக்கு வழங்கவேண்டும். அரசு பொது மக்களுக்கு பல்வேறு இலவசங்களை வழங்குகிறது. ஆனால் மாநகராட்சி கழிப்பிடத்துக்கு கட்டணம் வசூலிக்கிறது. கழிப்பிடங்கள் தனியாரிடம் ஒப்படைத்தாலும் கட்டணமின்றி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

மேயர் சுப்பிரமணியன்:​ மெரீனா மற்றும் குடிசை பகுதியில் கழிப்பிடங்கள் இலவசமாக பயன்படுத்தப்படுகின்றன. உறுப்பினர்களின் எண்ணம் பாராட்டப்பட வேண்டியது. 

ருக்மாங்கதன்:​ மக்கள் நலனை பாதுகாக்க வேண்டிய சுகாதாரத்துறை கடந்த 3 ஆண்டுகளாக பலமுறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றன. இதுபற்றி அப்போதைய கமிஷனரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் மாறுதலாகி சென்று விட்டதால் பொது சுகாதாரத்துறையில் அதிக அளவில் முறைகேடுகள் நடக்கின்றன. 

மேயர்:​ பொதுவாக பேசக்கூடாது. எந்த பகுதி என்று குறிப்பிட வேண்டும். 

ருக்மாங்கதன்:​ ஓட்டல் மற்றும் தங்கும் விடுதிகளில் உரிமம் புதுப்பித்தலின்போது அதிகாரிகள் ஆய்வு செய்து உரிமம் வழங்கவேண்டும். அவ்வாறு வழங்காமல் விதிகளை மீறி உரிமம் புதுப்பிக்கப்படுகிறது. 

மேயர்:​ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி மீது nullநீங்கள் தான் புகார் கொடுக்கிறார்கள். விதிகளை மீறியதாக குற்றம் சாட்டுகிறீர்கள். அவற்றின் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுத்தால் நீnullங்களே தடையாக இருக்கிறீர்கள்.

ருக்மாங்கதன்:​ தாங்கள் இவ்வாறு கூறுவது முறையல்ல. நான் உங்களிடம் எப்போது சிபாரிசுக்கு வந்தேன். நான் யாரிடமும் கைகட்டி நிற்க தேவையில்லை. என் மீது nullநீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள். (இந்த நேரத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் ருக்மாங்கதன் ஆவேசத்துடன் சத்தமாக பேசினார்) 

இந்த மன்றத்தில் பேசுவதற்கு பல முறை அனுமதி கேட்டேன். எனக்கு வாய்ப்பு தரப்பட வில்லை. மேயர்:​ இந்த மன்றத்தில் அனைவருக்கும் பேச உரிமை வழங்கப்பட்டு உள்ளது. ஆளும் கட்சியை விட எதிர்க்கட்சிகளுக்கு அதிக வாய்ப்பு கொடுத்துள்ளேன். (இவ்வாறு மேயர் பேசும் போது, கவுன்சிலர் ருக்மாங்கதன் அடிக்கடி குறுக்கிட்டார்) ருக்மாங்கதன்:​ எழும்nullர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் பல்வேறு மருத்துவமனை அருகில் தள்ளுவண்டி, பழக்கடைகள் வைத்து சுகாதாரமற்ற முறையில் உணவு வழங்கப்படுகிறது. அவற்றை அகற்ற வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் புகார் கூறினேன். அதற்கு அவர்கள் கமிஷனர் சொல்லித்தான் ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் உள்ளது.

இவ்வாறு ருக்மாங்கதன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்